நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் சுமார் 18 வருட தங்களின் திருமண வாழ்க்கையை முடிவு கொண்டு வந்து, தாங்கள் இருவரும் ஒரு மனதாக பிரிவதாக அறிவித்து, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பிரிவுக்கு பின் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள ஐஸ்வர்யா புதிய பட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார், மறுபக்கம் சினிமாவில் மிக பெரிய சரிவை சந்தித்து வருகிறார் நடிகர் தனுஷ்.
இதற்கு முன்பு சொந்தமாக சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, படங்களை தயாரித்து வந்த தனுஷ் ஒரு சில படங்களை தவிர்த்து பல படங்கள் தோல்வியை தழுவியது, இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு கடனின் சிக்கினார் நடிகர் தனுஷ். கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்த தனுஷ்க்கு உதவும் வகையில் அவரது சொந்த தயாரிப்பில் காலா படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்தார் மாமனார் ரஜினிகாந்த்.
காலா படத்தில் வந்த லாபத்தில் கடனை அடைத்து விட்டு, அதன் பின்பு மாமனார் அறிவுரையை ஏற்று இனி படம் தயாரிப்பதில்லை என முடிவு செய்து தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடினார் தனுஷ், இதன் பின்பு தொடர்ந்து நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நடிகர் தனுஷ், தற்போது மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்த பின்பு சினிமாவில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படம் தோல்வியை தழுவியுள்ளது.
மேலும் தற்போது கைவசம் இருக்கும் படங்களும் பெரியதாக ஏதும் வரவேற்பு இல்லை, முன்னணி இயக்குனர்கள் யாரும் தற்போது உள்ள சூழலில் தனுஷை வைத்து படம் இயக்க முன் வரவில்லை, இதற்கு முன்பு தனக்கு நெருக்கடியான சூழலின் போது, மாமனார் செல்வாக்கை பயன்படுத்தி கொண்ட தனுஷ் தற்போது அதற்கும் வழியில்லாமல் போனது. இதனால் மீண்டும் சொந்தமாக படம் தயாரிக்க முடிவு செய்துள்ளார் தனுஷ்.
இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு வரும் தனுஷ், சொந்தமாக தயாரிக்க இருக்கும் புதிய படங்களுக்கு தேவையான பணம் இல்லாததால், முக்கிய சினிமா பைனான்சியர்களிடம் கடன் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் இதற்கு முன்பு உங்கள் மாமனார் செல்வாக்கை நம்பி உங்களுக்கு கடன் கொடுத்தோம், உங்களால் கடனை அடைக்க முடியவில்லை என்றதும் உங்கள் மாமனார் உதவி செய்து நீங்கள் கடனை அடைத்தீர்கள்.
தற்போது எதை நம்பி கடன் தருவது, மேலும் உங்கள் படத்தை விநியோகஸ்தர்கள் இனி வாங்குவார்களா என்பதே சந்தேகம் உள்ளது. உங்களுக்கு கடன் வேண்டும் என்றால் உங்க மாமனார் அல்லது அவர்கள் குடும்பத்தில் இருந்து யாராவது ஒருவரை எங்களிடம் பேச சொல்லுங்க என சினிமா பைனான்சியர்கள் கடன் கொடுக்காமல் தனுஷை விரட்டி விட்டுள்ளனர்.இதனால் தேவையான பணம் இல்லாமல் சினிமா தயாரிக்கும் முடிவை கைவிட்டுள்ளார் தனுஷ் என கூறப்படுகிறது.