ப்ளூ சட்டை மாறனை நைய புடைந்த ரசிகர்கள்..! PVR தியேட்டரில் நடந்தது என்ன தெரியுமா.?

0
Follow on Google News

பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து புதிய திரைப்படங்களை அநாகரிகமாக, மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்து வரக்கூடிய ஒரு நபர். படத்தில் கதை, திரைக்கதை, பாடல்கள், சண்டை காட்சிகள், இசை என இவற்றையெல்லாம் விமர்சனம் செய்வதை தவிர்த்து, அந்த படத்தின் ஹீரோ மற்றும் அந்த படத்தில் இடம்பெற்றுள்ள கதா பாத்திரங்களை குறிப்பிட்டு இழிவாக மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்து வருகின்றவர்.

இவர் தொடர்ந்து அஜித் நடிக்கும் படங்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்து அஜித் ரசிகர்களின் கடும் எதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். அந்த வகையில் விவேகம் படம் வெளியான போது, படத்தின் ஹீரோயின் காஜல் அகர்வால் மற்றும் நடிகர் அஜித் இடம்பெறும் காட்சிகள் தந்தை மகள் போன்று காட்சியளிப்பதாக விமர்சனம் செய்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இதே போன்று சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தை.

கீழ்த்தரமாக விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன், நடிகர் அஜித்தை உருவ கேலி செய்து விமர்சனம் செய்திருந்தார், அஜித் முகத்தில் தொப்பை விழுந்துள்ளது என்றும், அவருடை டான்ஸ் புரோட்டா மாவு பிசைவது போன்று இருப்பதாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் மத்தியிலும் கடும் கண்டனம் எழுந்தது. அஜித் ரசிகர்கள் மிக கடுமையாக ப்ளூ சட்டை மாறனை எச்சரித்து வந்தனர்.

இந்நிலையில் பிறமொழி படம் ஓன்று பார்ப்பதற்காக சென்னையில் உள்ள PVR தியேட்டருக்கு சென்றுள்ளார் ப்ளூ சட்டை மாறன், அப்போது அங்கே இருந்த சினிமா ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறன் மீது தாக்குதல் நடத்தியதாகவும், மேலும் PVR தியேட்டரில் ப்ளூ சட்டை மாறன் அச்சத்துடன் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த் சம்பவம் குறித்து பிரபல சினிமா விநியோகஸ்தர் மற்றும் நடிகர் ஜெயம் SK கோபி தெரிவித்ததாவது.

ப்ளு சட்டை மாறன் அவர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்க ஒன்று.. கருத்தை கருத்து மூலமாக தான் எதிர் கொள்ள வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் அஜித்தை உருவ கேலி செய்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்தது தொடர்பாக, இயக்குனர் சங்க தலைவர் RK செல்வமணியை நேரில் சந்திக்க உள்ள ஜெயம் SK கோபி,

ப்ளூ சட்டை மாறனை இயக்குனர் சங்கத்தில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு ஒன்றை கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். ப்ளூ சட்டை மாறன் மீது தாக்குதல் நடந்ததாக வெளியான தகவலை அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பலர் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

சமரசம் செய்ய மாமியார் வீட்டு கதவை தட்டிய தனுஷ்..! மாமியார் லதா என்ன சொன்னார் தெரியுமா.?