தமிழர்களின் உரிமைக்கான ஒற்றுமையை சீர்குலைந்த ரஜினிகாந்த்…. கொதித்தெழுந்த பாரதிராஜா..! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் திரைதுறையை சேர்ந்த மொத்த கலைஞர்களை அழைத்து அவர்கள் மத்தியில் பொது மேடையில் பாரதிராஜா மிக கடுமையாக நடிகர் ரஜினிகாந்தை வெளுத்து வாங்கிய சம்பவம் உங்களில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, சுமார் 20 வருடங்களுக்கு முன் காவேரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே கடும் மோதல் போக்கு உருவானது, அப்போது இயக்குனர் பாரதிராஜா தலைமையில் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியது.

நெய்வேலியில் உள்ள மின்சாரம் உற்பத்தி மையத்தின் இருந்து தான் கர்நாடகாவுக்கு மின்சாரம் செல்கிறது, காவேரியில் இருந்து கர்நாடக தண்ணீர் மறுத்து வருவதால், நெய்வேலியில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட வேண்டும் என, நெய்வேலியில் போராட்டம் நடத்த பாரதிராஜா தலைமையில், அப்போதைய நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த சம்மதத்துடன் நடைபெற்றது, இதில் சினிமா துறையை சேர்ந்த அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் நெய்வேலியில் நடக்கும் போராட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் எதிப்பு தெரிவித்து கலந்து கொள்ள போவதில்லை என தெரிவித்து, அகிம்சை முறையில் தனியாக சென்னையில் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்தார் ரஜினிகாந்த், இந்நிலையில் கமல்ஹாசன்,மனோரமா என ஒட்டு மொத்தம் தமிழ் சினிமாவும் நெய்வேலி போராட்டத்தில் கலந்து கொண்டு, அங்கே பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்பாட்டத்தில் தலைமை தாங்கி பேசிய இயக்குனர் பாரதிராஜா மிக கடுமையாக மேடையில் நடிகர் ரஜினிகாந்தை திட்டி தீர்த்தர், மேலும் அப்போது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி தமிழகத்தில் இருந்த நிலையில், அதிமுக நெய்வேலி போராட்டத்துக்கு ஆதரவாகவும், திமுக ரஜினிகாந்த் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவாகவும் செயல்பட்டதை தொடர்ந்து இந்த போராட்டம் முழுக்க முழுக்க ஒரு அரசியல் போராட்டமாக மாறியது.

முதல் நாள் நெய்வேலி போராட்டத்தில் கலந்து கொண்ட சினிமா துறையினர் அடுத்த நாள் ரஜினிகாந்த் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர், அப்போது ரஜினிகாந்த் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த கமல்ஹாசனிடம், நேற்று நடத்த நெய்வேலி போராட்டம் அரசியல் போராட்டமாக மாறியுள்ளதாக கூறப்படுவது பற்றி கேள்வி எழுப்பிய போது, நேற்று நடந்த போராட்டத்தில் அரசியல் இருந்தது,

ஆனால், இன்று நடக்கும் இந்த போராட்டமும் அரசியல் கலந்துள்ளது என நடிகர் ரஜினிகாந்த் அமர்த்திருந்த மேடை அருகிலே பேசினார் கமல்ஹாசன், இந்நிலையில் நெய்வேலி போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் தனியாக ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருந்தது போராட்டத்தின் ஒற்றுமையை சீர்குலைத்து விட்டார் ரஜினிகாந்த் என அப்போது கடும் விமர்சனம் எழுந்தது குறிப்பிடதக்கது.