இந்தியாவின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை உள்ளது. தற்போது உள்ள மக்களவை மற்றும் மாநிலங்கவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு பார்த்தால், பாஜக யாரை முன்னிறுத்துகிறதோ அவர்கள் தான் இந்தியாவின் குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவராக வருவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
இந்நிலையில் அடுத்த குடியரசு தலைவர் யார் என்கிற பட்டியலை தயார் செய்யும் பணிகளில் டெல்லி பாஜக தலைமை ஈடுபட்டு வருகிறது. உத்திரபிரதேசம் உட்பட வட மாநிலங்களில் நடக்கும் சட்டசபை தேர்தல் முடிந்து அந்தந்த மாநிலக்களில் புதிய ஆட்சி அமைந்ததும் அடுத்த குடியரசு தலைவர் யார் என்பதை பாஜக இறுதி முடிவு செய்ய இருக்கும் நிலையில் தற்போதே அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது பாஜக.
அந்த வகையில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒருவரை குடியரசு தலைவராக தேர்ந்தெடுத்தால், இந்தியாவில் இருக்கும் சிறுபான்மை வாக்குகளை பெறலாம் என்கிற கோணத்தில் குடியரசு தலைவர் பட்டியலில் இஸ்லாமிய சமூகத்தை சேர்த்த தலைவர்கள் பெயரும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஏற்கனவே இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த அப்துல் காலம் அவர்களை குடியரசு தலைவராக நியமித்தது பாஜக தான் என்பது குறிப்பிடதக்கது.
உத்திரபிரதேசம், பீகார் மாநிலக்களில் இருக்கும் யாதவ சமூக வாக்குகளை கவர்ந்து இழுக்க யாதவர் ஒருவர் பெயரும் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. அந்த வரிசையில் மஹாராஷ்டிரா அரசியலை குறிவைத்து குடியரசு தலைவரை தேர்தெடுக்கும் பணிகளிலும் பாஜக தலைமை ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் மராட்டியத்தை சேர்ந்த நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயரும் அடுத்த குடியரசு தலைவர் பரிசீலனை பட்டியலில் இடப்பெற்றிருப்பதாக டெல்லியில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் பரிசீலனை பட்டியலில் இடம் பெற்றுள்ள ரஜினிகாந்த் குடியரசு தலைவராக வருவதற்கு மிக குறைந்த வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தை சேர்ந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் பெயரும் பரிசீலனையில் இருந்து வருவதாக கூறப்படும் நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன் துணை குடியரசு தலைவராக வருவதர்க்கும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடதக்கது.