நடிகர் சிம்புவின் ஆருயிர் நண்பரான மஹாத் பாலிவுட் படமொன்றில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். நடிகர் சிம்புவின் பள்ளிக்கால நண்பரான மஹாத் அவரின் வல்லவன் திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் தலைகாட்டினார்.
அதன் பின்னர் அஜித் நடித்த மங்காத்தா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். ஆனாலும் தனி ஹீரோவாக அவரால் வளரமுடியவில்லை. அடுத்தடுத்து வெங்கட் பிரபு தன் படங்களில் அவருக்கு வாய்ப்புகளைக் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் இப்போது அவர் பாலிவுட் படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் முன்னணி நடிகைகளான ஹூமா குரேஷி மற்றும் சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடிக்கின்றனர். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.