ஒரு மாதம் தேர்தல் பிரச்சாரத்துக்கு ரூ.2 கோடி சம்பளம்.! நடிகை ஓவியாவை களம் இறக்கும் திமுக.!

0
Follow on Google News

நடிகை ஓவியா விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பு அவர் சில தமிழ் சினிமாவில் நடித்திருந்தாலும், மக்களுக்கு அவர் அறியப்படாதவராகவே இருந்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் மிக பிரபலமானவராக அறியப்பட்டார், இதற்கு காரணம் பிக் பாஸ் வீட்டில் உள்ள அவர் நடந்து கொண்டதை பார்த்தவர்களுக்கு அனுதாபம் ஏற்பட்டது.

குறிப்பாக இளைஞர் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்ற ஓவியாவுக்கு சமூக வலைத்தளங்களில் ஓவிய ஆர்மி என்கிற பெயரில் ஒரு ரசிகர் பட்டாளமே இருந்ததது, பிக் பாஸ் வீட்டில் ஓவியா இருந்த போது, ஒவ்வொரு வாரமும் அவர் நாமினேட் ஆகும் போது மற்ற போட்டியாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்தார், ஆனால் ஒரு கட்டத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்த நீச்சல் குளத்தில் விழுந்து தற்கொலை செய்ய ஓவியா முயற்சி செய்ததை தொடர்ந்து அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டார்.

இதனை தொடர்ந்து இனி ஓவியாவுக்கு மிக பெரிய சினிமா வாய்ப்பு கிடைக்கும் என பரவலாக பேசப்பட்ட நிலையில், குறிப்பிட்டு சொல்லும்படி எந்த ஒரு படமும் அமையவில்லை, ஆனால் ஓவியாவுக்கு இருந்த ரசிகர்கள் ஆதரவை பயன்படுத்தி, நகை கடை, ஜவுளி கடை திறப்பு விழாவுக்கு அழைக்கப்பட்ட ஓவியாவுக்கு பெரும் தொகையை சம்பளமாக கொடுத்தனர் கடை உரிமையாளர்கள், கடை திறப்புக்கு வரும் ஓவியாவை காண அந்தந்த கடை முன்பு பெருமளவில் ரசிகர்கள் குவிந்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது ஓவியாவுக்கு இருந்த வரவேற்பு படி படியாக குறைந்ததால், தற்போது கடை உரிமையாளர்கள் உட்பட அவருக்கு ரசிகர்களாக இருந்தவர்கள் கூட யாரும் கண்டுகொள்ளவில்லை, மேலும் சினிமா வாய்ப்புகளும் குறைந்துள்ளது, இதனை தொடர்ந்து வரும் தேர்தலில் தமிழகம் முளுவதும் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய நடிகை ஓவியாவை திமுக தரப்பில் அணுகியதாக கூறப்படுகிறது, ஆனால் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் வடிவேல் போன்று சினிமாவில் காணாமல் போய்விடுவேன் என்று தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஓவியா.

இதனை தொடர்ந்து திமுக தரப்பில் இருந்து இரண்டு கோடி வரை சம்பளம் தருவதாகவும், 30 நாட்கள் பிரச்சாரம் செய்தால் போதும் என்று வலியுறுத்தியதை தொடர்ந்து யோசித்து கூறுவதாக ஓவியா பதிலளித்தாராம். நடிகை ஓவியாவுக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதால் அவரை திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய சினிமா துறையை சேர்ந்த தனது நெருங்கிய நண்பரை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட செய்தது திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தான் என்கிற தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிட்டத்தக்கது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .