நடிகர் ரஜினிகாந்த் தற்பொழுது கூலி படத்தின் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார், இந்த படத்தை முடித்துவிட்டு ரஜினிகாந்த் அடுத்த என்ன படம் நடிக்க இருக்கிறார் என்கின்ற மிகப்பெரிய பரபரப்பு இருந்து வருகிறது, அந்த அளவுக்கு ரஜினிக்கு வரிசை கட்டி படங்கள் இருக்கிறது. இதற்கிடையில் மாரி செல்வராஜை ரஜினியுடன் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்திருக்கிறது.
அதற்கு பலன் தரும் விதத்தில் ரஜினியும் மாரி செல்வராஜை சந்தித்திருக்கிறார்கள். ஆனால் ரஜினிகாந்த் மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரஜினிகாந்த் மாரி செல்வராஜை கதை கேட்டு ரிஜெக்ட் செய்வது இது முதல் முறை அல்ல, ஏற்கனவே தயாரிப்பாளர் தானு, மாரி செல்வராஜை அனுப்பி ரஜினியிடம் கதை சொல்ல வைத்தார்.

ஆனால் அப்போதும் ரஜினிகாந்த் மாறி செல்வராஜுக்கு சரியான ரெஸ்பான்ஸ் செய்யவில்லை, இந்த நிலையில் திரும்ப இரண்டாவது முறையும் ரஜினி மாரி செல்வராஜ் கூட்டணியில், ஒரு படம் தயாரிக்க வேறு ஒருவர் முயற்சித்த நிலையில் அதுவும் தோல்வி அடைந்துள்ளது, இந்த நிலையில் மாரி செல்வராஜை ரஜினிகாந்த் தொடர்ந்து ரிஜெக்ட் செய்ய காரணம் என்ன என்கின்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித் இருவரும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றவர்கள், குறிப்பாக குறிப்பிட்ட சில சமூகத்தை சீண்டும் வகையில் அவர்களுடைய படத்தில் சில காட்சிகளை வைப்பது மட்டுமில்லாமல், பொது மேடைகளிலும் சில சமூகத்தை சீண்டும் வகையில் பேசி கடுமையான எதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றவர்கள் தான், இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் இருவரும்.
இதில் பா.ரஞ்சித் மெட்ராஸ் அட்டகத்தி, மெட்ராஸ் போன்ற சிறிய படங்களை எடுத்து ஆரம்ப கட்டத்தில் இருந்த போது, தொடர்ந்து கபாலி, காலா என இரன்டு படங்கள் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்த ரஜினிகாந்த், பா.ரஞ்சித் சினிமா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார், இதனால் பா.ரஞ்சித் மேடையில் இப்படி பேசுகிறார் என்றால் அதற்கு காரணம் ரஜினி தான் என்றும், அவர் தான் பா.ரஞ்சித்துக்கு தொடர்ந்து இரண்டு பட வாய்ப்பு கொடுத்து வளர்த்து விட்டது என்கிற கோபம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ரஜினி மீது உண்டு.
மேலும் ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா இந்த இரண்டு படத்திலும் பா.ரஞ்சித் அவருடைய கருத்தை ரஜினி மூலம் சினிமாவில் திணித்தது, ரஜினிக்கு எதிராக அமைத்தது என்றே சொல்ல வேண்டும், அந்த வகையில் ரஜினி தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் கபாலி, காலா இரண்டு படங்களில் நடித்ததால், ரஜினி மீது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கும் எதிரானவர் என்கிற சாயம் விழுந்தது.
அந்த சாயத்தை அகற்ற படாத பாடு பட்ட ரஜினிகாந்த், தற்பொழுது தான் யாருக்கும் எதிரி கிடையாது, நான் அனைவருக்குமான நடிகர் என இயக்குனர் தேர்வுகளிலிலும், கதை தேர்வுகளிலும் மிக கவனமாக இருந்து வருகிறார், அந்த வகையில் தற்பொழுது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினியை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர் விருப்ப பட்டால், உடனே வேண்டாம் என்று சொன்னால் கூட , ஒரு முறை கதையை கேட்டு பாருங்க என தயாரிப்பாளர் வலியுறுத்துவதாகவும்,
அதனால் தான் மாரிசெல்வராஜை சந்தித்து கதை கேட்ட பின்பு, ரஜினிகாந்த் சரியாக ரேபான்ஸ் செய்யாமல் ரிஜெக்ட் செய்து வருவதாகவும், குறிப்பாக ஏற்கனவே பா. ரஞ்சிதால் நான் பட்டது போதும், திரும்ப வேண்டாம் என்பதில் ரஜினிகாந்த் உறுதியாக இருப்பதால் தான் , மாரி செல்வராஜை ரஜினி ரிஜெக்ட் செய்ய காரணம் என kooraptukirathu