மிக பெரிய ஏமாற்றத்தில் மக்கள்… PS 2 படமா இது.. திரையரங்கில் சோர்வில் தூங்கும் மக்கள்..

0
Follow on Google News

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் சாதனை படைத்தது, அந்த வகையில் இரண்டாம் பாகத்திற்கான வரவேற்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்தது.

இந்த நிலையில் கோடை விடுமுறையை கொண்டாடும் விதத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் தற்போது வெளியாகி உள்ள நிலையில், இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய குழப்பம் ஏற்படும் வகையில் ஸ்கிரிப்பில் கோட்டை விட்டுவிட்டார் மணிரத்தினம் என்றே சொல்ல வேண்டும். பொன்னியின் செல்வன் பார்ட் 2 வில் நடிகர் விக்ரம் நடிப்பு மற்றும் ஏ ஆர் ரகுமான் இசை, கேமராமேன் ரவிவர்மன் ஒளிப்பதிவு இந்த மூன்றும் பாராட்டக் கூடியதாக அமைத்துள்ளது.

ஆனால் பல இடங்களில் படம் பார்ப்பவர்களுக்கு சோர்வை ஏற்படுத்தி உள்ளது. முதல் பாகத்தில் நடிகர் ஜெயராம் கலகலவென்று இருந்தவர் இரண்டாம் பாகத்தில் அடக்கி வாசிக்கிறார். மேலும் அல்வார் அடியான் ஜெயராம் இரண்டாம் பாகத்தில் புத்த பிச்சுவாக மாறுகிறார். ஆனால் எப்படி மாறுகிறார் எதற்காக மாறுகிறார் என்கின்ற விவரம் இந்த படத்தில் இல்லை.

அதே போன்று விக்ரம் பிரபு இந்த படத்தில் கொலை செய்யப்படுகிறார், ஆனால் எதற்காக கொலை செய்யப்படுகிறார் ஏன் கொலை செய்யப்படுகிறார் என்பது படத்தை பார்த்தவர்களுக்கு புரியவில்லை, மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெற்ற பல பாத்திரங்கள், இவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்கள், எதிரி நாட்டைச் சார்ந்தவர்களா.? இல்லை சோழ நாட்டைச் சேர்ந்தவர்களா என்கின்ற பல குழப்பங்கள் நீடிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

சுந்தர சோழனாக ராஜாவாக வரும் பிரகாஷ்ராஜ் பழுவேட்டையரால் வீட்டு சிறை வைக்கப்படுகிறார். ஆனால் ஒரு ராஜாவை எப்படி வீட்டு சிறை வைக்க முடியும் என்கின்ற லாஜிக்கே இல்லாமல் இந்த படத்தின் கதைகள் நகர்கிறது. மேலும் பிரகாஷ்ராஜ் மனைவியாக ஐஸ்வர்யா ராய் வருகிறார். ஆனால் இது நந்தினி ஐஸ்வர்யா ராய் கிடையாது, நந்தினியின் அம்மா ஐஸ்வர்யா ராய். பிரகாஷ்ராஜ் மனைவியாக வரும் ஐஸ்வர்யா ராயை உருகி உருவி காதலிக்கிறார்.

அதே போன்று பழுவேட்டையாரும் நந்தினி கதாபாத்திரத்தில் வரும் ஐஸ்வர்யா ராயை உருவி உருவி காதலிக்கிறார். இது போன்ற காட்சிகள் அந்த காலத்து தமிழ் மன்னர்கள் பெண் மீது மோகம் கொண்டவர்கள் போன்று அமைத்துள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் எந்த ஒரு பாடல் வரிகளும் மனதில் ஆழமாக பதியவில்லை, அந்த வகையில் வைரமுத்து பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறாதது பாடல்களில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

நான்கு பாகங்களாக எடுக்க வேண்டிய பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக சுருக்கி அதை கையாளுவதில் கோட்டை விட்டுவிட்டார் மணிரத்தினம். பொன்னியின் செல்வன் பார்ட் 1 படம் முழுக்க விறுவிறுப்பாகவும் பாராட்டும்படியாக இருந்தது. ஆனால் பொன்னியின் செல்வன் பார்ட் 2 முதல் பாதி ஓரளவு நன்றாக இருந்தாலும், இரண்டாவது பாதி திரையரங்குகளில் அமர்ந்திருப்பவர்கள் சிலர் சோர்வில் தூங்குவது, மற்றும் கை தொலைபேசி எடுத்து நோண்டும் அளவிற்கு மிகப்பெரிய இழுவையாக சென்று விட்டது.

கரிகாலச் சோழனை நந்தினி கொலை செய்யப்படும் பொழுது, அதில் விக்ரமனின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. அந்த வகையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருப்பது விக்ரமனின் நடிப்பு.ஆதித்த கரிகாலனை வந்தியத்தேவன் கொலை செய்ததாக வந்தியத்தவனான கார்த்திக் தூக்கு தண்டனை வழங்கும் போது ஒரு தொலைக்காட்சி சீரியல் போன்று, நான் தான் கொலை செய்தேன், நான் தான் கொலை செய்தேன் என்று பலரும் வருகிறார்கள்.

இப்படி பல இடங்கள் டிவி சீரியல் போன்று பொன்னியின் செல்வன் பார்ட் 2 நகர்கிறது, இந்த படத்தை பாகுபாலி, RRR போன்ற படங்களுடன் ஒப்பிடவே முடியாது.பாகுபலி RRR போன்ற படங்கள் விறுவிறுப்பாக ஒவ்வொரு காட்சியும் ஆழமாக பதிந்திருக்கும். ஆனால் பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்ப்பவர்களுக்கு இறுதியில் குழப்பங்கள் மட்டுமே மிஞ்சுகிறது. அதனால் பொன்னியின் செல்வன் பாகம் பார்த்து அடுத்த பொன்னியின் செல்வன் பாகம் 2க்காக எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு ஏமாற்றத்தை தான் பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு கொடுத்துள்ளது.