ஏ.ஆர்.ரகுமான் மனைவியை சீண்டிய நடிகை கஸ்தூரி… நச்சென்று பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்…

0
Follow on Google News

விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் ஏ.ஆர்.ரகுமான் அவரது மனைவி இருவரும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் ஏ ஆர் ரகுமான் மனைவி பேசுவதற்கு மைக்கை கொடுத்த பொழுது, அருகில் இருந்த ஏ ஆர் ரகுமான் ஹிந்தியில் பேசாதீர்கள் தமிழில் பேசுங்க என சொன்னார். அதற்கு ஏ.ஆர்.ரகுமான் மனைவி சிரித்துக்கொண்டே, எல்லோரும் மன்னிச்சிடுங்க எனக்கு சரளமாக தமிழ் பேச தெரியாது என தெரிவித்து தனது உரையை யார் மனைவி ஆரம்பித்தார்.

இந்த வீடியோவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்த நடிகை கஸ்தூரி, என்னது ஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன ? வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க? என கேள்வி எழுப்பி இருந்தார் இதற்கு ஏ.ஆர்.ரகுமான் காதலுக்கு மரியாதை என கஸ்தூரிக்கு பதிலளித்து இருந்தார்.

கஸ்தூரி கேள்விக்கு ஏ.ஆர்.ரகுமான் பதிலளித்து இருந்த நிலையில், அதற்கு வலைதளவாசி ஒருவர், மேடம் கஸ்தூரி உங்க வன்மத்தை அவரிடம் காட்டுனீங்க அவர் எவ்ளோ அன்பா பதில் சொல்லியிருக்கார் பாருங்க, அவர் வீட்ல என்ன பேசுவாங்க உங்களுக்கு தெரியனுமா?அண்ணாமலைகிட்ட சொல்லுங்க ஆடியோ ரெக்கார்டிங் பண்ணி அனுப்புவார், அடுத்தவன் வீட்ல எட்டி பார்க்காதீங்க ப்ளீஸ் என வலைதளவாசி ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார் கொடுத்திருந்தார்.

இதற்கு நடிகை கஸ்தூரி, சும்மா உருட்டாதீங்க. என் கேள்வியில் வன்மம் எதுவும் இல்லை. இத்தனை வருடம் தெரியாமல் இருந்தது, அவரே சொல்லித்தானே தெரிய வந்தது. வியப்பு கலந்த நியாயமான வினா எழுப்பியிருந்தேன். நேர்மையாக நேரடியாக என் சந்தேகத்தை கேட்டேன். ARR அவர்கள் cute ஆகா பதில் சொல்லியிருக்கிறார்.

குறுக்கு புத்தி படைத்தவர்கள் உள்ளே புகுந்து இதில் குளிர் காய நினைக்காதீர்கள். வெறுப்பு அரசியல் செய்யும் திராவிடிய சித்தாந்தவாதிகள் கிடைத்தது சாக்கு என்று இல்லாத பிரச்சினையை உருவாக்க துடிக்கிறார்கள். இதில் அண்ணாமலை எங்கு வந்தார். அதிலேயே தெரிகிறது உங்கள் நோக்கம். சிண்டு முடியும் சாத்தான்களே ஓடி விடுங்கள் என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.