பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நிகழ்ந்துள்ள வரலாற்று பிழைக்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. ஆதித்ய கரிகாலனை கொலை செய்த அந்த நான்கு நபர்களை காப்பாற்றுவதற்காகவே, உண்மையான வரலாற்றை மறைப்பதற்கு எழுதப்பட்ட பொய்யான வரலாற்றை உண்மையாக காட்டும் பொழுது மேலும் மேலும் பல பொய்களை மையப்படுத்தி உருவாகியுள்ள பொன்னியின் செல்வன், இது பொன்னியின் செல்வன் அல்ல இது பொய்யின் செல்வன் என்கின்றனர் தமிழ் ஆய்வாளர்கள்.
சினிமாவை சினிமாவாக பார்ப்பதற்கு தமிழ் சமூகம் தயாராக தான் இருக்கின்றது, ஆனால் வரலாற்றை வரலாறாக தான் பார்க்க வேண்டும். அதை சினிமா எடுக்கும் மணிரத்தினம் போன்ற இயக்குனர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வரலாறு என தெரிவித்துக்கொண்டு ஆதித்ய கரிகாலன், குந்தகை, அருள்மொழிவர்மன் சுந்தர சோழன், என என்றெல்லாம் பெயர்களை மையப்படுத்தி படம் எடுத்துவிட்டு.
ஆதித்ய கரிகாலன் இப்படித்தான் மரணம் அடைந்தார் என வரலாற்றை திரித்து திரைப்படமாக வெளியிட்டால் அது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் என பொங்கி எழு தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள். நல்ல வேலை மணிரத்தினம் மகாத்மா காந்தியின் வரலாற்று கதையை திரைப்படமாக எடுக்கவில்லை. அப்படி ஒரு வேலை மணிரத்தினம் மகாத்மா காந்தியின் கதையை படமாக எடுத்திருந்தால்,
கோட்சே துப்பாக்கியுடன் காந்தியை கொலை செய்ய வந்தார், கோட்சே தன்னை கொலை செய்ய போகிறார் என்று தெரிந்த காந்தி. கோட்சே கையில் வைத்திருந்த துப்பாக்கியை தனது கையால் பிடித்து தன்னுடைய வயிற்றில் வைத்து அந்த துப்பாக்கியை அழுத்தி மரணம் அடைந்தார் காந்தி என்று தான் மணிரத்தினம் படம் எடுத்திருக்க கூடும்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் தொடர்கதை 1951 லிருந்து 1955 வரை கல்கி புத்தகத்தில் வெளிவருகிறது. இதை வாங்குவதற்கு அன்று லட்சக்கணக்கானோர் மக்கள் திரண்டு நின்று காத்திருந்து வாங்கி சென்று படித்தார்கள் என்பதே உண்மை இல்லை என்கின்றனர் மூத்த எழுத்தாளர்கள். 1951 காலகட்டத்தில் தமிழகத்தில் கல்வி அறிவு உள்ள மக்கள் எத்தனை பேர். 1957 இல் காமராஜர் ஆட்சிக்கு வந்த பின்பு தான் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகிறது.
இப்படி இருக்கையில் கல்வி அறிவே பெரும்பாலும் இல்லாத தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் தொடரை தொடர்ந்து படித்ததாக கூறப்படுவது ஒரு பொய்யான தகவல். மேலும் அந்தக் காலகட்டத்தில் கல்கி பொன்னியின் செல்வன் நாவலை எழுதியதற்கான திடுக்கிடும் பின்னணி காரணங்களை சுட்டி காட்டுகிறார்கள் தமிழ் ஆய்வாளர்கள்.
அதில் 1939ல் நீலகண்ட சாஸ்திரி என்பவர் தி சோழ ஸ் என ஆங்கிலத்தில் வரலாற்று நூலை எழுதுகிறார். அந்த வரலாற்று ஆய்வு நூலில் பல கல்வெட்டுகளை உதாரணம் காட்டி, ஆதித்ய கரிகாலன் கொலை செய்த அந்த நான்கு பேர்களும் சத்திரியர்கள் இல்லை என்பதை சுட்டிக்காட்டி அம்பலப்படுத்துகிறார் நீலகண்ட சாஸ்திரி.
அவரை தொடர்ந்து பல வரலாற்று ஆய்வாளர்கள் தொடர்ந்து பல நூல்களை எழுதுகிறார்கள், அதில் தொடர்ந்து ஆதித்ய கரிகாலனை கொலை செய்த நால்வரும் சத்திரியர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எழுதுகிறார்கள். இப்படி ஒரு காலகட்டத்தில் ஆதித்ய கரிகாலனை கொலை செய்த அந்த நான்கு பெயரை காப்பாற்றுவதற்காக திட்டமிட்டு ஒரு பொய்யான வரலாற்றை பதிய வைக்கவே பொன்னியின் செல்வன் நாவலை கல்கி எழுதியதாக திடுக்கிடும் தகவலை தெரிவிக்கின்றனர் தமிழ் ஆய்வாளர்களும், மூத்த எழுத்தாளர்களும்.