இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ், தனது பள்ளிக்காலத்திலேயே சைந்தவியை பல வருடம் காதலித்து, பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன், கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கோலிவுட்டின் Favourite ஜோடியாக வலம் வந்த ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும், இதுவரை எந்த ஒரு சர்ச்சைகளிலும், கிசுகிசுப்புகளிலும் சிக்காமல் Best Pair ஆக இருந்தனர்.
ஆனால் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இந்த தம்பதியினர், திடீரென நாங்கள் பிரிந்து வாழ போவதாக கூறி விவாகரத்து செய்கிறோம் என்று அறிவித்தனர். முதலில் இசையமைப்பாளராக இருந்த ஜிவி பிரகாஷ், பிறகு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.

அப்படி அவர் கொடுத்த ஹீரோ என்ட்ரி தான் இவர்களின் விவாகரத்துக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில் ஹீரோவாக படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு ஜிவி பிரகாஷ், ஹீரோயின்களிடம் மிகவும் நெருக்கமாக நடிக்க ஆரம்பித்தது தான், குடும்பத்திற்குள் விரிசல்கள் ஏற்பட காரணமானது என கூறப்படுகிறது.
பிரிவதாக அறிவிப்பதற்கு முன்பே, ஜிவியும், சைந்தவியும் இரண்டு வருடங்களாகவே ஒழுங்காக பேசிக்கொள்வதில்லை. இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் இருந்தபோது இரண்டு பேருக்கும் புரிதல் இருந்தது. ஆனால் ஜிவி நடிகராக மாறிய பிறகு சிறிய விரிசல் ஒன்று விழுந்துவிட்டது. அதேபோல் ஜிவி பிரகாஷ் சம்பாதிக்கும் பணத்தை சைந்தவி தனது தாய் வழியாக செலவு செய்கிறார் என்றெல்லாம் தகவல் பரவியது.
இந்த நிலையில் சைந்தவி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார். கடந்த வாரத்தில் சைந்தவியின் சகோதரரும் அவருடைய குடும்பத்தினரும் சரிகமப நிகழ்ச்சியில் கெஸ்ட் ஆக கலந்து கொண்டனர். அப்போது சைந்தவி குறித்து அவருடைய அண்ணன் உருக்கமாக பேசுகையில், சைந்தவி தான் எங்கள் வீட்டில் செல்ல குழந்தை.
இப்போ அவளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது ஆனாலும் எங்களுக்கு என்றும் இவள் தான் முதல் குழந்தை என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே சைந்தவி அழுது கொண்டு அண்ணனை கட்டிப்பிடித்தார். பிறகு கண்ணீரோடு பேசிய சைந்தவி நான் என்னுடைய அண்ணியையும் கூப்பிட விரும்புகிறேன். ஏன்னா இந்த ஒற்றுமை அண்ணன் தங்கச்சிக்குள்ள கண்டினியூ ஆகணும் என்றால் அதற்கு அந்த மாதிரி ஒரு வைஃப் கிடைக்கணும் என்று சொன்னதும் சைந்தவியின் அண்ணியும் அவருடைய மகனும் மேடைக்கு வந்தனர்.
அப்போது தன்னுடைய அண்ணன் மகனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சைந்தவி தொடர்ந்து பேசினார். அப்போது நான் ரொம்ப கொடுத்து வச்சவள். கடவுள் என்னை இந்த குடும்பத்தில் பிறக்க வச்சதுக்கு ரொம்ப நன்றி. நான் பின்னாடி விழுந்தா இவங்க எல்லாருமே என்ன பிடிக்க இருக்கிறார்கள் என்று தைரியம் எனக்கு எப்போதும் இருக்கு என்று பேசியது பார்ப்பவர்கள் கண் கலங்கியது.
இந்நிலையில் சைந்தவியை விட்டு விலக வேண்டும் என ஜி வி பிரகாஷ் தவறான முடிவை எடுத்து விட்டார் என்றும், இது போன்ற நல்ல மனம் படைத்த மனைவியை விட்டு விலகி ஜி வி பிரகாஷ் என்ன செய்ய போகிறார் என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஜி வி பிரகாஷை விட்டு சைந்தவி பிரிந்து வாழ்ந்து வந்தாலும் அவருடைய குடும்பம் அவருக்கு மிக பெரிய சப்போர்ட்டாக இருப்பதாக கூறப்படுகிறது.