ஆண்டி இண்டியனுக்கு நோ கட்… நோ மியூட்: படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்

0
Follow on Google News

சமூக வலைத்தளங்களில் சினிமாவை விமர்சனம் செய்பவர்களில் ஒருவர்தான் புளு சட்டை மாறன். இளமாறன் என்ற இயற்பெயரைக் கொண்ட மாறன், புளு சட்டை அணிந்து கொண்டு சினிமா விமர்சனம் செய்வதால் சினிமா வட்டாரங்களில் இவரை புளு சட்டை மாறன் என்றே அழைத்து வருகின்றனர்.

பல கோடி பட்ஜெட்டில் வெளியான படங்களாகட்டும், பல முன்னணி நடிகர்களின் சினிமாக்களாகட்டும் இவர் யோசிக்காமல் அந்த படம் சரியில்லை என்று விமர்சனம் செய்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பையும் சம்பாதித்தார். பல சினிமாக்களையும் விமர்சனம் செய்யும் இவரால் தரமான சினிமாவைக் கொடுக்கமுடியாமா என்று ரசிகர்களும் இவரை நோக்கி கேள்விக்கணைகளை தொடுத்து வந்தனர்.

இதை நிரூபிக்கும்விதமாக இவர் தனது சொந்த தயாரிப்பில் ‘ஆண்டி இண்டியன்’ என்ற படத்தை இயக்கினார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று நடந்து முடிந்துள்ளது. சமீபத்தில் இப்படத்திற்கு சான்றிதழ் பெறுவதற்காக மத்திய தணிக்கைத்துறையினருக்கு அனுப்பி வைத்தனர்.

படத்தை பார்த்த தணிக்கைத் துறையினர் படத்தில் 35 காட்சிகள் தணிக்கை துறையின் விதிமுறைகளுக்கு மாறாக இருப்பதாக கூறி அதை நீக்கும்படி படக்குழுவினருக்கு தெரிவித்துள்ளனர். ஆனால், படக்குழுவினரோ இதை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்றனர்.

நீதிமன்றம் தற்போது படக்குழுவினருக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதவாது, தணிக்கைக் குழுவினர் கூறிய 34 காட்சிகளையும் நீக்கவேண்டியதில்லை. அதேபோல், அதில் மியூட் சத்தமும் போடத் தேவையில்லை என்று கூறியுள்ளது. இது படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இப்படத்தில் நரேன், ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போதைய அரசியல் சூழ்நிலையை நையாண்டி செய்யும் விதமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் புளு சட்டை மாறன். வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.