வைரமுத்துவின் முகத்திரையை கிழிக்காமல் விடமாட்டேன்..! முக்கிய அரசியல் புள்ளியிடம் கை கோர்த்த சின்மயி.. .வசமாக சிக்கும் வைரமுத்து..

0

வைரமுத்து மீதான பாடகி சின்மயின் தெரிவித்த பாலியல் புகார் 2018ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, வைரமுத்து மீது சின்மயி தெரிவித்த பாலியல் புகாரை தொடர்ந்து வைரமுத்து மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றசாட்டு தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது. மேலும் வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து ஒவ்வொரு சம்பவத்தையும் தொடர்ந்து வெளியிட்டார் சின்மயி. இந்நிலையில் இந்த விவகாரம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சில காலம் வைரமுத்து பாலியல் விவகாரம் சற்று ஓய்ந்த நிலையில், இந்த விவகாரத்தை மீண்டும் பாடகி சின்மயி கையில் எடுத்துள்ளார். சில மாதங்களுக்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து பெண்களை வேட்டையாடும் விதம் என்கிற தலைப்பில். தொடர்ந்து அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்தும், அவர்கள் எவ்வாறு வைரமுத்துவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்கள் என்பது குறித்த தகவலை வெளியிட்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதில் தனக்கு நடந்த கொடுமைகள் பற்றியும் சின்மயி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக குற்றசாட்டுகளை மட்டும் தெரிவிக்காமல் , நீங்கள் குற்றச்சாட்டும் நபர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க முயற்சிக்கவில்லை என்கிற விமர்சனம் பாடகி சின்மயி நோக்கி எழுந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் தேசிய அளவில் மிக சில முக்கிய நபர்களை தொடர்பு கொண்ட சின்மயி இது குறித்து பேசியவர் வைரமுத்து விவகாரத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்று அவரின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அப்போது வைரமுத்து அரசியல் பின்னணி கொண்டவர், அதனால் அவரை எதிர்த்து நான் அடுத்த கட்டத்துக்கு செல்ல உங்களை போன்றோர் உதவி தேவை என சின்மயி கேட்டு கொண்டதாக கூறபடுகிறது. இந்த ஆலோசனையின் போது வைரமுத்துவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் பட்டியலை தயார் செய்ய சின்மயிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, அதற்கு தன்னிடம் ஏற்கனவே அந்த பட்டியல் உள்ளது, மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் என்னை அவ்வப்போது தொடர்பு கொண்டு தான் இருக்கிறார் என சின்மயி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இறுதியில் அந்த முக்கிய நபர் சின்மயிடம் சில விவரங்களை தெரிவித்துள்ளார். அதில் வலுவான ஆதாரத்தையும், சாட்சியங்களையும் தயார் செய்யுங்கள், விரைவில் இது தொடர்பாக மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிரிதி இராணி கவனத்துக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்வோம் என்றும், மேலும் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்து, வைரமுத்துவால் பாலியல் துன்புறுத்த பட்டு பாதிக்கப்பட்ட பெண்களை தனியாக அழைத்து விசாரணை விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்போம்.

பாதிக்கப்பட்ட பெண்களிடம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்திய பின்பு வைரமுத்து மீதான பாலியல் குற்றசாட்டு குறித்து தேசிய மகளிர் ஆணையம் வைரமுத்துவை டெல்லிக்கு அழைத்து விசாரணை நடத்தும், இதன் பின்பு இந்த விவகாரம் இந்தியா முழுவதும் முக்கியத்துவம் பெறும் இதன் பின்பு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்வோம் என்றும் அந்த முக்கிய நபர் தெரிவித்துள்ளார். இதற்கு சின்மயி அப்படியே ஆகட்டும் அதற்கான வேலையை இப்ப இருந்தே தொடங்குவோம் என குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.