தெலுங்கு லூசிபரில் இருந்து நீக்கப்பட்ட நயன்தாரா! நடிக்கப்போவது இவர்தான்!

0
Follow on Google News

நடிகை நயன்தாரா லூசிபர் படத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
மலையாளத்தில் மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சு வாரியர் மற்றும் விவேக் ஓப்ராய் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் லூசிபர். இந்த படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். ரீமேக் படங்களுக்கென்றே புகழ்பெற்ற இயக்குனர் மோகன் ராஜா இந்த படத்தை இயக்குகிறார்.

மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் இப்போது அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுபோலவே தமிழில் தான் நடிக்க ஒப்புக்கொண்ட சில படங்களில் இருந்தும் நயன்தாரா விலகிக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.