வாடகைக்கு இருந்த இடத்தை ஆட்டைய போட்டாரா இளையராஜா.?அதிர்ச்சி தகவலை வெளியிட்ட முக்கிய பிரபலம்..

0
Follow on Google News

இளையராஜாவை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தான் ஓவராக புகழ்ந்து அவரை கெடுத்தது என்றும் மேலும் ஞானி என்கின்ற ஒரு பெயருக்கு ஒரு காலத்தில் இளையராஜாவுக்கு தகுதி இருந்தது, ஆனால் அவரே இப்போது அதை கெடுத்துக் கொண்டார் என தயாரிப்பாளர் கே ராஜன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார், மேலும் இளையராஜா குறித்து கே ராஜன் பேசுகையில்,

தயாரிப்பாளர் பணத்தில் ஒரு பாடலுக்கு டியூன் போட்டுவிட்டு, தயாரிப்பாளர் பணத்தில் பாடகர்களுக்கு சம்பளம் கொடுத்து, இசை அமைப்பாளருடன் வாத்தியம் வாசிக்கும் அத்தனை நபர்களுக்கும் தயாரிப்பாளரின் பணம். மேலும் இசையமைப்பாளர் வீட்டிலிருந்து கிளம்பி இசைக்கூடத்திற்கு வரும் வரை குடிக்கும் தண்ணீர் முதல் கொண்டு தயாரிப்பாளரின் பணம்.

இப்படி தயாரிப்பாளரிடம் பணத்தை பெற்று ஒரு பாடலுக்கு டியூன் போட்டுவிட்டு, இறுதியில் அந்த பாடல் ட்யூன் எனக்கு சொந்தமானது. அந்தப் பாடலை எங்கே பாடினாலும், ரெக்கார்ட் செய்தாலும் எனக்கு கமிஷன் கொடுக்க வேண்டும் என்று காப்பி ரைட்ஸ் ஆக்டிவ் கேஸ் போட்டு வசூல் செய்த இளையராஜாவுக்கு பணம் கொடுத்த தயாரிப்பாளர்கள் ஏழையாகி விட்டார்கள் என தெரிவித்த கே ராஜன்.

மேலும், இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் உடல் நலம் சரியில்லாமல் சில வருடங்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார், கோவையில் சில காலம் சிகிச்சை பெற்று வந்துள்ளார் கங்கை அமரன். இதை கேள்விப்பட்ட பாரதிராஜா உடனே விமானத்தில் சென்று கங்கை அமரனை பார்த்து கண்ணீர் விட்டு அழுததாகவும், இந்த விஷயத்தை பாரதிராஜாவே தன்னிடம் சொன்னதாக தெரிவித்த கே ராஜன்.

மேலும் ஆனா இளையராஜா தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூட தம்பி கங்கை அமரன் எப்படி இருக்கின்றார் என்று உடல் நலம் குறித்து விசாரிக்கவில்லை என்றும், இதற்கு காரணம் எங்கே தம்பியின் மருத்துவ செலவுக்கு தன்னிடம் பணம் கேட்டு விடுவார்கள் என்பதற்காக தான் தம்பி கங்கை அமரன் மருத்துவமனையில் இருந்தபோது தொலைபேசியில் கூட தொடர்பு கொண்டு இளையராஜா உடல் நலம் குறித்து விசாரிக்கவில்லை என தெரிவித்த கே ராஜன்.

தொடர்ந்து பேசியவர், பிரசாத் லேப்பில் வாடகைக்கு இருந்த அறையை இது என்னுடைய சொந்த இடம் என எழுதிக் கொடு என்று கேஸ் போட்டவர் தான் இளையராஜா என அதிர்ச்சி தகவலை வெளியிட்டவர், மனோபாலா குறித்து கோடம்பாக்கம் மேம்பாலம் சர்ச்சை குறித்து மேலும் பேசுகையில், கோடம்பாக்கத்தில் ஒரு காலத்தில் அந்த பிரிட்ஜ் இல்லாத போது அங்கே ரயில்வே கேட் இருக்கும்.

கோடம்பாக்கத்தில் படப்பிடிப்புக்காக எம் ஜி ஆர், சிவாஜி போன்ற நடிகர் அவ்வழியாக வருவதை பார்ப்பதற்காக மக்கள் பெரும் திரளாக அங்கே கூடியிருப்பார்கள், அது வழியாக செல்லும் நடிகர்கள் மக்கள் பார்த்து கை அசைத்து விட்டு செல்வார்கள். ஆனால் இளையராஜாவிடம் வாய்ப்பு கேட்டு பாலத்தை அருகில் பல இயக்குனர்கள் நின்றார்கள் என்று இளையராஜா தெரிவித்துள்ளது பொய் என தெரிவித்த தயாரிப்பாளர் கே ராஜன்.

இளையராஜாவுடன் வாய்ப்பு கேட்க வேண்டும் என்றால் அவருக்கு ட்யூன் போட்டுக் கொண்டிருக்கும் பிரசாத் ஸ்டூடியோவில் தான் தயாரிப்பாளரும் இயக்குனர்களும் சென்று வாய்ப்பு கேட்பார்கள், எதற்காக அவர் வரும் வழியில் பிரிட்ஜில் காத்திருக்க வேண்டும், அதனால் மனோபாலா ப்ரிட்ஜ்ல் காத்திருந்தார் என்று இளையராஜா சொல்வது பொய் என கே ராஜன் தெரிவித்துள்ளார்.