சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் அந்த நிகழ்ச்சியில் இருந்து தப்பித்து உயிர் பிழைத்தால் போதும் என்கிற சூழலுக்கு மிக பெரிய குளறுபடி ஏற்பட்டது, இந்த மிக பெரிய குழப்பத்திற்கு முக்கிய காரணமாக அளவுக்கு அதிகமாக டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது தான் என்கிற குற்றசாட்டு எழுந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியை 20 ஆயிரம்பேர் கூடுவார்கள் என தெரிவித்து, காவல்துறையிடம் அனுமதி கடிதம் கொடுத்த நிலையில், கூடுதலாக 21 ஆயிரம் டிக்கெட்டுகள் என மொத்தம் 41 ஆயிரம் டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளது தான் மக்கள் மிக பெரிய துயரத்துக்கு உள்ளாக காரணம் என கூறப்படுகிது, இந்நிலையில் விஜய் ஆண்டனி பாஜகவுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக இந்நிகழ்ச்சியில் குளறுபடிகள் நடத்த சதி செய்ததாகத் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்கள்.
அந்த யூ ட்யூபில் வெளியிட்ட வீடியோவில், பாஜக யாத்திரைக்காக டைட்டில் பாடலை விஜய் ஆண்டனி கம்போஸ் செய்து கொடுக்கவிருந்தார். ஆனால் முதலில் ஏ.ஆர்.ரஹ்மானை தான் அதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது குழு அணுகியது. ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கலந்துகொள்ள மாட்டேன் எனக்கூறி அவர்களை திருப்பி அனுப்பி விட்டதாகவும்.
அதன் பின்பு இசைஅமைப்பாளர் தீனா மற்றும் கங்கை அமரன் இணைந்து அப்பாடலை கம்போஸ் செய்ததை அந்த யூ டியூபில் பேசிய பெண் மேலும். பாஜக யாத்திரைக்கான பாடலை இசையமைத்து தராததால் கோபமுற்ற அண்ணாமலை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு குறி வைத்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்கெனவே மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட அந்த நாளில் நிகழ்ச்சியில் குளறுபடிகளை நிகழ்த்த பேரங்கள் நடைபெற்றதாகவும்.
ஏசிடிசி நிறுவனத்தினை சேர்ந்த பவித்ரன் ஷெட்டி என்பவர் அண்ணாமலை உடன் சேர்ந்து இதற்கான பணிகளில் ஈடுபட்டார் என்றும், ஏ.ஆர்ரஹ்மானுக்கு இந்நிகழ்ச்சியில் கரும்புள்ளி குத்த சதி செய்யப்பட்டது. அப்படி செய்தால் அதன் பின் ஏ.ஆர்.ரஹ்மான் தேர்தல் சமயத்தில் வேறு வழியில்லாமல் பாஜகவை அணுகுவார். தேர்தல் பாடலை அவரை வைத்து கம்போஸ் செய்யலாம் என அண்ணாமலை திட்டமிட்டுள்ளார் என்றும்,
மேலும் சமீபத்தில் பாஜகவினருக்கு நெருக்கமாக வலம் வரும் விஜய் ஆண்டனி இந்த நிகழ்ச்சி தனிப்பட்ட பொறாமை காரணமாக இந்த சதிவேலைக்கு துணை போயுள்ளார்” எனத் அந்த யுடியூப் சேனலில் பெண் யூ ட்யூபர் பேசிய வீடியோ மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள விஜய் ஆண்டனி விவகாரத்தில் தன்மீது அவதூறு பரப்பிய யூடியூப் சேனல் மீது மானநஷ்ட வழக்கு தொடர இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என் மீது அன்பு கொண்ட, என் அன்பு மக்களுக்கு வணக்கம். நான் இப்போது சிறு மன வேதனையுடன், இந்தக் கடிதம் மூலம் சில சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். ஒரு சகோதரி, யூடியூப் சேனல் ஒன்றில் என்னையும் சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மானையும் தொடர்புப்படுத்தி பொய்யான வதந்தி ஒன்றை பரப்பி இருக்கிறார். அது முற்றிலும் பொய்யே! அந்த யூடியூப் சேனல் மீது நான் மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன். மானநஷ்ட வழக்கில் வரும் தொகை அனைத்தையும், நலிவடைந்த இசைத்துறை நண்பர்களுக்கு முழுமையாக கொடுக்க முடிவு செய்துள்ளேன்’. இஎன விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விஜய் ஆண்டனி மீது ஆதாரமில்லாமல் அபாண்டமாக குற்றசாட்டுகளை பேசி வீடியோ வெளியிட்ட பெண் யூ டியூபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் ஆண்டனி ரசிகர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.