அனிருத் – கீர்த்தி சுரேஷ் திருமண சர்ச்சை… நச் பதில் கொடுத்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்த கீர்த்தி சுரேஷ்..

0
Follow on Google News

கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் கலக்கிக்கொண்டிருக்கும் இசையமைப்பாளர் அனிருத்தைச் சுற்றி ஏற்கனவே, பல கிசுகிசுக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தென்னிந்திய சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷும் ராக்ஸ்டார் அனிருத்தும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகச் தகவல் வெளியாகி மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து நடிகை கீர்த்தி சுரேஷிடம் கேட்ட போது, மனதில் இருப்பதைப் பட்டென்று போட்டுடைத்துள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் மட்டுமின்றி, பாலிவுட் முன்னணி நடிகரான ஷாருக்கான் அவர்களின் படத்திற்கும் இசையமைத்து தெறிக்க விடும் ராக்ஸ்டார் அனிருத் அடுத்தடுத்து பல்வேறு படங்களைத் தன்வசம் வைத்திருக்கிறார்.

அவ்வப்போது மியூசிக் கான்சர்ட், படங்களின் ஆடியோ லாஞ்ச் என பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதேசமயம், தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ், கடைசியாக இவர் கதாநாயகியாக நடித்து வெளியான மாமன்னன் திரைப்படத்திற்கு அமோகமான வரவேற்ப்பு கிடைத்தது. இதனையடுத்து ரகுதாதா ரிவால்வர் ரீட்டா என சில படங்களை கைவசம் வைத்துள்ள கீர்த்தி சுரேஷைப் பற்றி பல கிசுகிசுக்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதுமட்டுமின்றி, நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்தும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு அவரது திருமணம் குறித்து வெளியாகும் செய்திகளுக்கு கீர்த்தி சுரேஷ் தரப்பில் இல்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருவது வழக்கமாக மாறி விட்டது. அவ்வாறு இருக்கையில், மீண்டும் கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்தான தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

குறிப்பாக, வட இந்திய ஊடகங்களில் சில இருவரின் திருமணம் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளன. அதில் இசையமைப்பாளரான அனிருத்தும் கீர்த்தி சுரேஷூம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளன. இது ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், திருமணம் பற்றி நடிகை கீர்த்தி சுரேஷிடம் கேட்ட போது, “ அது தவறான செய்தி.. அனிருத் எனக்கு நல்ல நண்பர்.” என்று பளிச்சென்று பதிலளித்துள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத்துடன் கீர்த்தி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் முன்னதாக வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானதும் இந்த வதந்திகளுக்கு முக்கியக் காரணமாகும். எப்படியானாலும், இருவரும் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டால் மட்டுமே செய்தி உறுதியாகும். எனவே, ரசிகர்கள் பொறுமையாகக் கவனிப்பது சிறந்தது.