நான் ஏன் வேறு ஒரு நம்பிக்கையை தழுவினேன்… மனம் திறந்த ஏ.ஆர்.ரகுமான்..

0
Follow on Google News

ஏ.ஆர்.ரகுமான் தந்தை ஒரு இசை கலைஞர், இந்துவாக திலீப் குமராக பிறந்த ஏ.ஆர்.ரகுமான் சிறு வயதிலே தந்தையை இழந்து விடுகிறார். தந்தை மரணத்திற்கு பின்பு மிக பெரிய சிரமத்திற்கு மத்தியில் இசையை கற்று தேர்ந்து கொண்டிருந்த ஏ.ஆர்.ரகுமான், சிறு வயதிலே பல இசை ஜாம்பவான்களிடம் மியூஸிசன் ஆக பணியாற்றியவர், அந்த வரிசையில் இளையராஜா, டி ராஜேந்திரன் போன்றவர்களிடம் மியூஸிசன் ஆக பணியாற்றியவர் ஏ.ஆர்.ரகுமான்.

தன்னுடைய 20 வயதில் இஸ்லாமிய மதத்தை தழுவிய பின்பு, தன்னுடைய திலீப் குமார் என்கிற பெயரை ஏ.ஆர்.ரகுமான் என்று மாற்றி கொண்டார். இந்நிலையில் இளம் வயதில் ரோஜா படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி முதல் படத்திலே தேசிய விருதை பெற்று உச்சத்தில் அமர்ந்த ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் வேறு ஒரு மதத்தின் நம்பிக்கையை தழுவியது பற்றி பேசியுள்ளார்.

அதில், தன்னுடைய அப்பா தனது கடைசி காலத்தில் போராடிக்கொண்டிருந்த போது பல ஆன்மீக குருக்களை சந்தித்ததாக தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான் . அப்படி ஒவ்வொரு ஆன்மீக குருக்களை சந்தித்த போது இறுதியாக சூஃபி என்கிற ஆன்மீக குருவை சந்தித்துள்ளார். அப்போது சூஃபி என்கிற ஆன்மீக குரு மீன்டும் 10 வருடங்களுக்கு பிறகு அவரை தாங்கள் சந்திக்க வருவோம் என காந்திருந்தாக தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்.

இந்நிலையில் தன்னுடைய தந்தை இறந்த பின்பு, ஆன்மீக குரு சொன்ன விஷயத்தையெல்லாம் மறந்து விட்டதாகவும், ஆனால் 1பி வருடங்களுக்கு பின்பு, ஒரு நாள் இசைக்கு தேவையான பொருட்களை சிங்கப்பூரில் இருந்து எடுத்து வந்த போது, விமான நிலையத்தில் உள்ள சுங்க துறை அதிகாரிகளால் கடுமையான சோதனைக்கு ஏ.ஆர்.ரகுமான் உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் அந்த இடத்தில் சூஃபி என்கிற மத குருவின் சீடன் ஒருவர், சுங்க துறை அதிகாரிகளின் கடுமையான சோதனையில் இருந்து, அவர்களின் நடைமுறைகளை எளிதாக்கி அங்கிருந்து ஏ.ஆர்.ரகுமான் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் கடந்து செல்ல உதவி செய்துள்ளார். இதனை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து மீண்டும் சூஃபி என்கிற மத குருவை ஏ.ஆர்.ரகுமான் சந்திக்க சென்றதாகவும்.

அப்போது மத குரு சூஃபி, ஏ.ஆர்.ரகுமானை ஆசிர்வாதம் செய்த பின்பு வாழ்க்கையில் பல மாற்றங்கள் தனக்கு ஆரம்பித்தது என தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான். நாங்களாக தான் இஸ்லாமிய நம்பிக்கையை ஏற்றோம், யாருமே, எங்களை இந்த மத நம்பிக்கையை ஏற்று கொள்ளுங்கள் என்று எங்களை வற்புறுத்தவில்லை என்றும், இதன் பின்பு தன்னுடைய வாழ்க்கையில் அமைதியான ஒரு சூழல் ஏற்பட்டு எல்லாமே நல்லபடியாக செல்ல தொடங்கியது.

நான் போட்ட ட்யூன்கள் நிராகரிக்கப்பட்ட போது, என்னுடைதொடர்பான ய பிராத்தனைகளுக்கு பின்பு அந்த ட்யூன்கள் ஏற்கப்பட்டது. இதன் பின்பு சூஃபி புத்தகங்களை வசித்து நிறைய கற்று கொண்டதாக தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான், அது தனக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது என்றும். மேலும் நான் வேறு ஒரு மதத்தை தழுவிய போது எனக்கு எந்த ஒரு அழுத்தமும் இல்லை என்று தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்.

இதற்கு காரணம் இந்தியர்கள் அனைத்து மதங்களையும் மிகவும் ஏற்றுக்கொள்வதால் தான் நாங்கள் எந்த பாகுபாட்டையும் எதிர்கொள்ளவில்லை என்றும், குறிப்பாக தென்னிந்தியாவில் திறந்த மனப்பான்மையோடு இருப்பதை தாண்டி மிகவும் அரவணைப்போடும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். வாழு, வாழவிடு என்ற கோட்பாட்டின்படி வாழ்பவர்கள் ஆனால், அரசியல் சூழல் காரணமாக, சில ஆண்டுகளாக நாட்டில் வித்தியாசமான சூழல் நிலவுவதை உணர்கிறேன் என ஏ.ஆர்.ரகுமான் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.