ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ ஆர் ரகுமான். முதல் படத்தில் தேசிய விருது போன்ற பல விருதுகளை வாங்கி குவித்து, ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் தான் பக்கம் திருப்பினார். ஒரே படத்தில் அப்போது இருந்த முன்னணி இசையமைப்பாளர் அனைவரையும் பின்னுக்கு தள்ளிய ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களில் ஹிட்டான பாடல்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர்களை உருவாக்கினார்.
ஏ ஆர் ரகுமான் ஹிந்தியில் இசையமைப்பதற்காக, ஹிந்தி பட இயக்குனர்களும், முன்னணி நடிகர்களும் சென்னையில் வந்து அவரின் கால் சீட்டுக்காக காத்திருந்த காலம் உண்டு. ஹிந்தியில் இசையமைக்க தொடங்கிய ஏ ஆர் ரகுமான், தன்னுடைய இசையால் இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் ஆட்டம் போட வைத்தவர். இந்தியாவின் நம்பர் ஒன் இசையமைப்பாளராக உருவெடுத்தார்.
தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள் படத்தில் இசையமைத்து வந்த ஏ ஆர் ரகுமான் கடந்த சில வருடங்களாக சினிமாவில் அவருடைய மார்க்கெட் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான படங்களில் இடம்பெற்ற எந்த ஒரு பாடலும் பெரிதாக மக்கள் மனதில் இடம் பிடிக்கவில்லை. தொடர்ந்து அவர் இசையமைக்கும் படங்கள் மிக பெரிய தோல்வியை சந்தித்து வருகிறது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான பல படங்களில் கதை திரைக்கதை தோல்வியை சந்தித்தாலும், அந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இடம்பெற்ற பாடல்கள் மிக பெரிய ஹிட் அடித்து, ஏ.ஆர்.ரகுமான் இசைக்காகவே வெற்றி படங்கள் உண்டு. இப்படி தமிழ், இந்தி சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி இசையமைப்பாளராக பிஸியாக இருந்த ஏ ஆர் ரகுமான் தற்பொழுது அவருடைய மார்க்கெட் மிக பெரிய சரிவை சந்தித்துள்ளது.
படிப்படியாக இந்தி சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போனதுமட்டுமில்லாமல், பல்வேறு காரணங்களால் ஒட்டு மொத்த இந்தி சினிமா துறையும் ஏ.ஆர்.ரகுமானை புறக்கணிக்க முடிவு செய்தது. இந்த கோபத்தின் வெளிப்பாடு தான் சமீபகாலமாக தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிற மொழிகளை மட்டம் தட்டும் வகையில் மொழி அரசியலை ஏ.ஆர்.ரகுமான் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒட்டுமொத்த இந்தி சினிமாவும் ஏ.ஆர்.ரகுமானை புறக்கணித்து விட்டதால், இந்தியில் உள்ள முன்னணி நடிகர்கள் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தால், தங்கள் படம் தோல்வியை சந்தித்து விடும் என்பதற்காக தங்கள் படத்தில் ஏ.ஆர்.ரகுமானை ஒப்பந்தம் செய்யாமல் தவிர்த்து வருகின்றனர் பாலிவுட் நடிகர்கள் மற்றும் அந்த படத்தின் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் என்று கூறப்படுகிறது.
தற்பொழுது ஏ.ஆர்.ரகுமான் கைவசம் எந்த ஒரு ஹிந்தி படமும் இல்லாத நிலையில், இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருகான் நடிக்கும் ஜவான் படத்தில் முதலில் ஏ ஆர் ரகுமான் தான் இசை அமைப்பதாக இருந்துள்ளது. ஆனால் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் படங்களுக்கு இந்தியில் வரவேற்பு இல்லை, மேலும் ஒட்டுமொத்த இந்தி சினிமாவும் ஏ.ஆர்.ரகுமான் மீது கடும் கோபத்தில் இருப்பதை உணர்ந்த ஜவான் படத்தின் நடிகர் ஷாருகான்.
தன்னுடைய படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க வேண்டும் என இயக்குனர் அட்லீயிடம் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஏ ஆர் ரகுமானுக்கு பதிலாக ஜவான் படத்தில் அனிருத்தை இசையமைக்க ஒப்பந்தம் செய்துள்ளார் இயக்குனர் அட்லி என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. அதே நேரத்தில் தமிழ் சினிமாவிலும் முன்னனி நடிகர்கள் நடிக்கும் படத்தில் இசையமைக்கு வாய்ப்பை இழந்துள்ள ஏ.ஆர்.ரகுமான் சின்ன சின்ன படங்களுக்கு இசையமைத்து வருவது குறிப்பிடதக்கது.