பாவம்யா வைரமுத்து… ஏற்கனவே சின்மயி இழுத்து தெருவில் விட்டது போதாதா.. இப்ப புதுசா இவரா..!

0
Follow on Google News

வைரமுத்து மீதான பாடகி சின்மயின் தெரிவித்த பாலியல் புகார் 2018ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, வைரமுத்து மீது சின்மயி தெரிவித்த பாலியல் புகாரை தொடர்ந்து வைரமுத்து மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றசாட்டு தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது. மேலும் வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து ஒவ்வொரு சம்பவத்தையும் தொடர்ந்து வெளியிட்டார் சின்மயி. இந்நிலையில் இந்த விவகாரம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

மேலும் பாடலாசிரியர் வைரமுத்து பெண்களை வேட்டையாடும் விதம் என்கிற தலைப்பில். தொடர்ந்து அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்தும், அவர்கள் எவ்வாறு வைரமுத்துவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்கள் என்பது குறித்த தகவலை வெளியிட்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் சின்மயி. தொடர்ந்து பாலியல் குறித்து வைரமுத்துவை இன்றளவு விமர்சனம் செய்து வருகின்றவர் சின்மயி

இந்நிலையில் . பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, புதிய பாராளுமன்ற திறப்பு விழாவன்று பாராளுமன்றம் நோக்கி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாகச் செல்ல முயற்சித்தனர்.

அபப்டி தடையை மீறி பேரணியாக சென்ற சென்றவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின். பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர்மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள். இந்திய பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும், தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது முதல்வர் முக ஸ்டாலின் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்த கண்டனத்திற்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கவிஞர் வைரமுத்து மீது இதுவரை 19 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து ஒருமுறை கூட அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் டெல்லியில் மல்யுத்த விராங்கனைகளில் குற்றச்சாட்டுகளில் பாஜக எம்.பி மீது 2 பிரிவுகளில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் நடந்த மல்யுத்த வீரர்களில் போராட்டத்திற்கு குரல் கொடுத்து இருந்தார் கமல்ஹாசன், அதற்கு சின்மயி, தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி ஒருவர், தன்னிடம் அத்துமீறிய பாலியல் குற்றவாளியை வெளிச்சம்போட்டு காட்டியதற்காக 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டார். அந்த கவிஞர் உங்களுக்கு நெருக்கமானவர் என்பதால் அதைப்பற்றி பேசவில்லை. கண்முன்னே நடக்கு துன்புறுத்தலை புறக்கணித்துவிட்டு பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசும் அரசியல்வாதியை எப்படி நம்ப முடியும் என வைரமுத்துவை மீண்டும் இழுத்து தெருவில் விட்டார் சின்மயி.

அதே போன்று தற்பொழுது பாஜக தலைவர் அண்ணாமலை, கவிஞர் வைரமுத்து மீது இதுவரை 19 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து ஒருமுறை கூட அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார், அந்த வகையில் உலகில் எங்கே பாலியல் விவகாரம் எழுந்தாலும், அதற்கு உதாரணமாக வைரமுத்துவை பலரும் இழுத்து தெருவில் விடுவது, என்னடா இது வைரமுத்துவுக்கு வந்த சோதனை என பரிதாபத்தில் உள்ளது வைரமுத்துவின் நிலைமை.