படு மோசமான வசூல்…500 கோடி, 100 கோடியா… வாய்ப்பே இல்லை … இதுக்கு மேல பொய் சொன்ன மாட்டிக்குவாங்க..

0
Follow on Google News

இம்மாதம் 19ம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வெளியானது.முழுக்க முழுக்க காஷ்மீரில் படமாக்கப்பட்ட லியோ படம் தியேட்டரில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது. பாடல் வரிகள் மற்றும் புகைபிடிக்கும் காட்சிகள் சர்ச்சை, ஆடியோ லாஞ்ச் தடை மற்றும் திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளுக்குத் தடை என படத்தை ரிலீஸ் செய்வதற்குள் படக்குழுவினரும் தயாரிப்பு நிறுவனமும் படாதபாடு பட்டனர்.

ஒருவழியாக, அத்தனை பிரச்சினைகளையும் சமாளித்து படத்தை வெளியிட்டால், ‘ஆர்டினரி மேன்’ சாங் காப்பி, படத்தின் கதை காப்பி என பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒருபுறம் விஜய் ரசிகர்கள் லியோ ரிலீஸ் ஆனதிலிருந்து படத்தை தியேட்டரில் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். மறுபக்கம், நெட்டிசன்கள் மீம்ஸ் மூலமாக படம் குறித்து நெகட்டிவ் விமர்சனங்களை வாரி இறைத்து வருகின்றனர்.

இந்த நெகட்டிவ் விமர்சனங்களால் லியோ ஓடாமல் போய் விடுமோ என்ற கலக்கத்தில் விஜய் ரசிகர்கள் இருக்கின்றனர். அதேசமயம், படத்தின் வசூல் குறித்தும் பல்வேறு தகவல்கள் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே, படத்தின் தயாரிப்பு நிறுவனம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 148.5 கோடி வசூலித்துள்ளதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

ஆனால், அதற்கடுத்து தினசரி வசூல் விவரங்களை வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் ‘வசூலில் லியோ ஜெயிலர் படத்தின் சாதனையை முறியடிக்க முடியாமல் திணறுது போல, அதனாலதான் அடுத்தடுத்த நாள்களில் வசூல் விவரங்களை வெளியிடவில்லை’ என்று விமர்சித்து வந்தனர். மேலும், ஜெயிலரா, லியோவா என்று ரஜினி-விஜய் ரசிகர்கள் இணையத்தில் விவாதப் போர் நடத்தி வந்தனர்.

விஜய் ரசிகர்கள் பலரும் லியோ வசூல் சாதனையை முறியடிக்கும் என்று சவால் விட்டு வந்தனர். இப்படி இரு தரப்பு ரசிகர்களும் வார்த்தைப் போரில் மோதிக் கொண்டிருந்த நிலையில், படத்தின் முதல் வார வசூல் ரூ. 400 கோடி என்று செய்திகளில் வெளியாகியுள்ளன. விஜய்க்கு மற்ற மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக, கேரளாவில் பெரும்பாலான விஜய் ரசிகர்கள் இருக்கும் காரணத்தினாலேயே அங்கு வசூலும் சக்கை போடு போட்டது.

அப்படி பார்த்தால் இந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 45 கோடி வரை வசூளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் தள்ளியது. ஆனால், ரஜினி ரசிகர்கள் ‘ஜெயிலர் படம் ஒட்டுமொத்தமாக ரூ. 600 கோடி வசூல் செய்துள்ளது, இதை லியோ நெருங்குகிறதா என்று பார்ப்போம்’ என்று மீண்டும் சவால் விட்டுக் கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில், ஏழாவது நாளான நேற்று திரையரங்குகளில் கூட்டம் கொஞ்சம் குறைவாகவே இருந்துள்ளது.

ஆயுத பூஜையின் தொடர் விடுமுறை நாட்கள் முடிந்தது தான் இதற்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், அண்டை நாடான இலங்கையிலும் வசூல் அப்படியே குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. வார நாட்களில் மொத்தமாக படம் ரூ. 4 கோடி வரை மட்டுமே வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி வசூலில் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கும் லியோ, ஜெயிலர் வசூலை முறியடிக்குமா என்ற சந்தேகமும் உள்ளது. காத்திருந்து பார்த்தால்தான் தெரியும்..