வசூலில் பலத்த அடி வாங்கிய லியோ… மொத்த வசூலும் இவ்ளோ தானா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயத்தில் ரிலீஸ் ஆன லியோ படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே, முதல் நாளிலேயே லியோ வசூல் சாதனை படைத்து விட்டதாக லியோ தரப்பு தகவலை வெளியிட்டிருந்தது.

இப்படியான நிலையில், ஐந்தாவது நாளான லியோ வசூல் குறித்து பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, நடிகர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தை விட லியோ வசூலில் பின்தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. லோகேஷின் மாஸ்டர் பீஸான கைதி, விக்ரம் போன்ற படங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு ஹிட் அடித்தது.

இதனாலேயே லோகேஷ் விஜயை வைத்து எடுத்த லியோ படத்தின் மீதும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு, ஒரு வழியாக கடந்த அக்டோபர் 19-ந் தேதி லியோ திரைப்படம் வெளியானது. இப்படி தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிவிட்ட லியோ திரைப்படத்தை படத்தைப் பார்த்த பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், படம் ஐந்தாவது நாளில் மட்டும் ரூ 78.98 கோடியை வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், லியோவின் ஐந்தாவது நாள் வசூல் ஆனது, ஜெயிலரின் வசூலை முறியடிக்கவில்லை என கூறப்படுகிறது. அதாவது விஜய்யின் லியோ தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபிஸில் 5 நாட்களில் ரூ. 75 கோடியை மட்டுமே வசூல் செயத்துள்ளது,

ஆனால், ரஜினியின் ஜெயிலர் அதே காலக்கட்டத்தில் ரூ. 122.83 கோடியை வசூல் செய்துள்ளது என்றும், நடிகர் விஜயின் லியோ, ரூ.27.63 கோடி வசூலுடன் முதல்நாளில் சாதனை படைத்தது. அதையடுத்து 2ஆம் நாள் ரூ.15.95 கோடியும், 3ஆம் நாள் ரூ.13.32 கோடியும், 4ஆம் நாள் ரூ.12.79 கோடியும், 5ஆம் நாளில் வெறும் ரூ.9.51 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.

ஆனால், நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயலர் படம் முதல் நாளில் ரூ.29.46 கோடியும், 2-ம் நாளில் ரூ.20.25 கோடியும், 3-வது நாளில் ரூ.26.38 கோடியும், 4-வது நாளில் ரூ.31.04 கோடியும், 5-வது நாளில் ரூ.15.70 கோடியும் வசூலித்து பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்டது. இந்நிலையில் லியோ, ஆறாவது நாளில் இந்திய அளவில் 250 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஆனால் நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் இந்திய பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் ரூ 344.50 கோடிகளை வசூலித்திருந்தது என்பது குறிப்பிடத்தகது.

அந்த வகையில் உண்மையான வசூலை வெளியிடாமல் லியோ படம் 500 கோடி வசூல், 1000 கோடி வசூல் என விஜய் ரசிகர்கள் வடை சுட்டு வந்தாலும், சினிமா துறையில் இருக்கும் முக்கிய பிரமுகர் மூலம் விஜய் நடித்த லியோ படம் இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் வசூலை நெருங்க கூட முடியவில்லை என்பது தான் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சமீப காலமாக விஜய் – ரஜினி இடையே நடந்து வரும் சூப்பர் ஸ்டார் சர்ச்சை குறித்த விவகாரம் மிக பெரிய சர்ச்சையாக வெடித்து வந்த நிலையில் விஜய் தான் வசூலில் டாப் ஒன், அதனால் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என விஜய்யின் அனுதாபிகள் பலர் கம்பு சுத்தி வந்த நிலையில் , தற்பொழுது ஜெயிலர் வசூலை முறியடிக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை கிட்ட கூட நெருங்க முடியாமல் ரஜினியிடம் போட்டியிட்டு மண்ணை கவ்வியுள்ள விஜய் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.