நானும் ரவுடி தான், அம்மா சாத்தியமா நானும் ரவுடி தான் என வடிவேலு நகைசுவை கட்சியில் வருவது போன்று, லியோ நல்ல வசூல் தான் சந்திமயமா நம்புங்க என லியோ பட தயாரிப்பாளர் கதறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார், கடந்த வெளிவந்த படம் லியோ. இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு லியோ படத்தின் மீது ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். ஆனால் படம் வெளியான பின்பு எதிர்ப்பார்த்து படம் பார்க்க பார்க்க சென்றவர்கள் கழுவி கழுவி ஊத்தி வருகிறார்கள்.
முதல் நாளே உலகளவில் ரூ. 148 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்த லியோ ஒரு வாரத்தில் உலகளவில் ரூ. 461 கோடி வரை வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் சமீபத்த்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய திருப்பூர் சுப்ரமணியம், தமிழக திரையரங்க உரிமையாளர்களுக்கு ‘லியோ’ படத்தால் லாபம் கிடைக்கவில்லை.
தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத ஷேரை இந்தப்படத்திற்காக வாங்கி விட்டார்கள். ரிலீசுக்கு முயன்பாக கடைசி வரை படம் திரையிடப்படுமா என்ற சந்தேகம் நிலவி வந்தது. கேரளாவில் இதே படத்தை 60 சதவீத பங்கீட்டு தொகைக்கு ஒப்புகொண்டவர்கள், தமிழ்நாட்டில் 80 சதவீதத்தை வாங்கியிருக்கிறார்கள். திருவனந்தபுரத்தில் 60 சதவீதம், கன்னியாகுமரியில் 80 சதவீதம் பங்கீட்டு தொகை என்றால் என்ன கணக்கு இது? என்று பேசியிருக்கிறார்.
மேலும் லியோ படத்தோடு வேறு எந்த படமும் வெளியாகாததால் திரையரங்க உரிமையாளர்கள் விருப்பமின்றி தான் அப்படத்தை திரையிட்டுள்ளதாகவும், லியோ படம் ஒரு வாரத்தில் 461 கோடி வசூல் என்று சொல்வதெல்லாம் ஹீரோவை திருப்தி படுத்துவதற்காக சொல்லப்படுவதாகவும் அது உண்மையில்லை எனவும் அவர் யூடியூப் பேட்டிகளில் பேசி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் லியோ பட தயாரிப்பாளர் லலித் குமார் அளித்திருக்கும் பேட்டியில் சர்ச்சைகளுக்கு பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, லியோ படத்தை 80 சதவீத ஷேர் கொடுத்தால் தான் வெளியிடுவோம் என்று சொல்வதெல்லாம் பொய். பெரும்பாலான தியேட்டர்களில் எப்போது வாங்கும் ஷேர் தொகையுடன் தான் வெளியிட்டுள்ளோம். வெறும் 42 தியேட்டர்களில் மட்டுமே 80 சதவீத ஷேர் கேட்டோம்.
திருப்பூர் சுப்ரமணியம் ஏன் இப்படி பேசுகிறார் என தெரியவில்லை. அவர் தான் லியோ படத்தை கோவையில் வெளியிடும் விநியோக உரிமையை கேட்டார். ஆனால் நாங்கள் வேறொருவருக்கு விற்றுவிட்டோம். அதை மனதில் வைத்து தான் இப்படி பேசுகிறார் என நினைக்கிறேன். அதேபோல் லியோ படம் ஒரு வாரத்தில் 461 கோடி வசூலித்தது உண்மையான வசூல், அதில் பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை.
இந்த நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் அறிவிப்பு வெளியான நிலையில், என்னாது வெற்றி விழாவா.? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா உங்களுக்கு.? என தோல்வி அடைந்த படத்திற்கு எதற்கு வெற்றி விழா என பலரும் கிண்டல் செய்து வருவது குறிப்பிடதக்கது.