ஜோவிக்கா பாய் ப்ரெண்ட் வெச்சுக்க… அதெல்லாம் நல்லது… அம்மா வனிதவே இப்படி சொல்லலாமா.?

0
Follow on Google News

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் உள்ளே நுழைந்த முதல் நாளில் இருந்தே கடுமையான டாஸ்க்குகளையும் சச்சரவுகளையும் ஏற்படுத்தும் விதமாக பிக் பாஸ் பல சம்பவங்களை செய்து வருகிறார். கூடுதலாக இந்த சீசனில் பிக் பாஸ் வீடு இரண்டாகப் பிரிந்து பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என மாறியிருக்கிறது. தற்போது பிக் பாஸ் இல்லத்திற்குள் ரேங்கிங் டாஸ்க் நடந்து வருகிறது. பொதுவாக நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில்தான் இந்த ரேங்கிங் டாஸ்க் வரும்.

ஆனால், நிகழ்ச்சி ஆரம்பித்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் ரேங்கிங் டாஸ்க்கை எடுத்து போட்டியாளர்களுக்குள் பரபரப்பு தீ மூட்டி இருக்கிறார் பிக் பாஸ். இந்த டாஸ்க்கில் பிரதீப் மற்றும் ஜோவிகா பகிரங்க சண்டை போட்டனர். கடைசியில் ஜோவிகா முதல் இடத்தில் நின்று வெற்றியும் பெற்றார். பிரபல நடிகையான வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா என்பதனால் அவரின் மீது பல எதிர்பார்ப்பு பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

ஏற்கனவே தனக்கு படிப்பு வரவில்லை என்பதால் 9ம் வகுப்போடு நின்றுவிட்டேன் என அவர் பேசியது பெரும் விவாதப்பொருளானது. மேலும், தனது படிப்பு சம்பந்தமான எந்த விஷயத்தையும் மற்ற கண்டெஸ்டெண்ட்ஸ் யாரும் பேசவேண்டாம் என்று அவர் உத்தரவிட்டார். இதன் காரணமாக பிக்பாஸ் வீட்டிற்குள் பெரும் சண்டை வெடித்தது. ஆனால் ஜோவிகா தனது விளையாட்டால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகாவுடன் இணைந்து முன்னதாக கொடுத்த பேட்டி ஒன்றில் பேசியதாவது “நான் ஜோவிகாவிடம் சொன்னேன் “ஜோவிகா நீ ஒரு பாய் பிரண்ட் வச்சுக்கிட்டா எவ்வளவு யூஸ்புல்லா இருக்கும். ஒரு பாய் பிரண்ட் இருந்தா அழகா பிக்கப் பண்ணுவான், ட்ரோப் பண்ணுவான். உனக்கு துணியெல்லாம் மடிச்சு குடிப்பான்” என்று நான் ஜோவிகாவிடம் சொன்னேன்.

அதற்கு ஜோவிகா “எனக்கு பாய் பிரண்டே வேண்டாம்” என்று என்னிடம் கோவமாக சொன்னால். ஆனால் ஜோவிகா கண்டிப்பா ஒருநாள் காதலில் விழுவாள், வேற லெவலில் விழுவாள். அது நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும்” என்று வனிதா பேசியுள்ளார். இருப்பினும் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி படு போராக மாறிவிட்ட நிலையில், மூன்று மணி நேர நிகழ்ச்சி நடத்தி புதிதாக 5 போட்டியாளர்களை வைல்டு கார்டாக உள்ளே விட்டு ஹைப்பை அதிகரிக்க பிக் பாஸ் குழு பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அந்த ஐந்து பேர் யார் என்கிற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்க, இந்த வாரம் எலிமினேட் ஆக போவது யார் என்றும் கேள்வி இருக்கிறது. இந்த வாரம் வினுஷா எலிமினேட் ஆக அதிகம் வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வினுஷா பிக் பாஸ் வீட்டில் இருப்பதே தெரியாத அளவுக்கு தான் இருக்கிறார் என ஷோ ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. வினுஷா கன்டென்ட் கொடுப்பதில்லை என பிக் பாஸே ஒருமுறை அவரை சிறைக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி வயசானவர் லிஸ்ட்டில் அடுத்து உள்ளே இருக்கும் யுகேந்திரனையும் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் வைத்து வெளியே அனுப்ப உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றனர். இதனால் அடுத்து வயசானவர் லிஸ்ட்டில் விசித்ரா தான் உள்ளார் என தெரிகிறது. கடந்த வாரத்தைப் போலவே பிரதீப் ஆண்டனி மீண்டும் அவருக்கு ஆதரவாக அதிகபட்ச வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.

எப்படியாவது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு வாரத்தையாவது மறுபடியும் பார்த்து கமலுக்கு ஸ்கோர் கொடுக்க வேண்டும் என நினைத்த பிக் பாஸ் டீம் புதிதாக 5 போட்டியாளர்களை உள்ளே விட்டுள்ளனர். அவர்களாவன ரச்சிதாவின் முன்னாள் கணவர் தினேஷ், விஜே அர்ச்சனா, ஆர்ஜே பிரேவோ, அன்னபாரதி மற்றும் கானா பாலா உள்ளிட்ட 5 பேரை வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே அனுப்பி உள்ளனர்.