வந்து அசிங்கப்பட வேண்டுமா… விஜய் அழைப்பை புறக்கணித்த ரஜினிகாந்த்..

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த 19 தேதி உலகம் முழுவதும் வெளியாகி வெற்றி நடைபோடுகிறது. மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு மீண்டும் லியோ படத்தில் இணைந்த விஜய்-லோகேஷ் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

சில கலவையான விமர்சனங்கள் இப்படத்தின் மீது இருந்தாலும் கூட மக்களின் பேராதரவு காரணமாக லியோ வெற்றிநடை போட்டு வருகிறது. முதல் நாளே உலகளவில் ரூ. 148 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்த லியோ ஒரு வாரத்தில் உலகளவில் ரூ. 461 கோடி வரை வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இப்போது படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கூட இன்னும் ஆகவில்லை.

ஆனால், லியோ ஐநூறு கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும், அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால், லியோ வசூல் வேட்டை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் படத்தில் முதலீடு செய்த தயாரிப்பு நிறுவனமும் உற்சாகத்தில் உள்ளது. எனவே, இந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாட ஒரு வெற்றிவிழா நடத்த வேண்டும் என்று படக்குழுவும் தயாரிப்பு நிறுவனமும் முடிவு செய்தது.

ஆகவே, அதற்கான பணிகளிலும் தீவிரமாக வேலை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, பாதுகாப்பு காரணங்கள் கருதி படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. ஆனால், இப்போது சில கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் காவல்துறை வெற்றிவிழா கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் வெற்றி விழாவுக்கான ஏற்பாடுகள் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முழு வீச்சில் நடைபெற்று வந்தது.

மாலை நான்கு மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி இரவு எட்டு மணிக்குள் முடியும் என்று கூறப்படுகிறது. மேலும், வெற்றி விழா கொண்டாட்டத்திற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் மட்டுமே வாங்க முடியும் என்பதையும் படக்குழு அறிவித்திருந்தது. அதுமட்டுமில்லாமல், அரங்கத்தில் ஐந்தாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்றும், பாஸ் வைத்திருப்பவர்கள் கையோடு ஆதார் ஆட்டை நகலையும் எடுத்து வரவேண்டும் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு பக்கம் நிகழ்ச்சியை பாதுகாப்பாக நடத்தி முடிக்க இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், மறுபக்கம் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களை அழைக்கும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், லியோவின் வெற்றி விழா கொண்டாட்டத்திற்கு கமலும் ரஜினியும் வருவதாக ஒரு சில செய்திகள் வெளியாகின.

தன் தீவிர ரசிகன் லோகேஷுக்காக கமல் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் கூட , நடிகர் ரஜினி கலந்துகொள்ள மாட்டார் என்று பலரும் கூறுகின்றனர். இருப்பினும், தனது அடுத்தப் படத்தை லோகேஷ்தான் எடுக்கிறார் என்பதை கருத்தில் கொண்டாவாவது ரஜினி வரலாம். ஆனால் அப்படி ரஜினி கலந்து கொண்டால், அரங்கத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் ரஜினியை சீண்டும் வகையில் கமெண்ட் செய்துவிட்டால் அது பெரிய சர்ச்சை ஆகிவிடும் என்பதாற்காக ரஜினிகாந்த் வெற்றி விழாவிற்கு வர வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது.