சூப்பர் ஸ்டார் நடிகருக்கு காலில் அறுவை சிகிச்சை!

0
Follow on Google News

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபுவுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாம். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபு இப்போது சர்காரு வாரிபட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலிஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது மகேஷ் பாபுவுக்கு காலில் அடிபட்டதாக சொல்லப்படுகிறது.

இதற்காக அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுள்ளார்.மருத்துவர்கள் காலில் ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனக் கூறியதை அடுத்து அந்த அறுவை சிகிச்சைக்காக மகேஷ் பாபு அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.