அண்ணாத்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ் இழந்த பிரம்மாண்டமான படம்… இப்போ என்ன ஆச்சு!

0
Follow on Google News

நடிகை கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார்.
கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய மொழிகளில் இருக்கும் திறமையான நடிகைகளில் ஒருவர். சில வருடங்களுக்கு முன்னர் அவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். இதையடுத்து அவருக்கு நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. ஆனால் இடையில் ரஜினியின் அண்ணாத்தப் படத்துக்கான வாய்ப்பு வந்ததால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இருந்து விலகினார்.

ஆனால் அண்ணாத்த படமும் பெரிதாக ஓடவில்லை என்பதால் இப்போது அப்செட்டில் இருக்கிறாராம். கீர்த்தி சுரேஷ் மறுத்த கதாபாத்திரத்தில் இப்போது திரிஷா நடித்துள்ளார்.

error: Content is protected !!