கள்ளக்குறிச்சி கலவரம் பற்றி வெளியான திடுக்கிடும் பின்னணி… முன்பே எச்சரித்த ரஜினிகாந்த்..!

0
Follow on Google News

கள்ளகுறிஞ்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டது குறித்து திடுக்கிடும் அதிச்சியூட்டும் பின்னணி என்ன என்பது குறித்து பல தகவல் வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டம், ஐபிஎல் க்கு எதிரான போராட்டம் என போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி காவல் துறைக்கு எதிரான தாக்குதல் பின்பு கலவரமாக உருவெடுப்பது என தமிழகத்தில் தொடர்கதையாக இருந்து வந்தது. இதில் சமூக விரோதிகளின் உச்சக்கட்ட கோரா தாண்டவமாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டதில் ஊடுருவி போலீசார் மீது நடத்திய தாக்குதல் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வரும் சூழலுக்கு தள்ள பட்டனர்.

தூத்துக்குடி கலவரத்துக்கு பின்பு நடந்த அரசு மற்றும் காவல்த்துறை எடுத்த நடவடிக்கைக்கு பின்பு கலவரமில்லா தமிழகமாக திகழ்ந்தது. இந்நிலையில் கள்ளகுறிஞ்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீநிதி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை, அந்த மாவட்டத்தை சேர்ந்த ஆட்சியர், காவல்த்துறை உயர் அதிகாரிகள் சரியான முறையில் கையாள தவறி விட்டனர் என்கிற குற்றசாட்டு எழுந்துள்ளது.

மாணவி மர்மமான முறையில் தற்கொலை தான் செய்து கொண்டார் என்றாலும், பெற்றோர்கள் உணர்வுக்கு மதிப்பளித்து மாவட்ட ஆட்சியரும், கள்ள குறிஞ்சி காவல் துறை உயர் அதிகாரிகள் அல்லது சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் உடனே சம்பவ இடத்திற்கு சென்று மாணவி பெற்றோர் தரப்பில் பேசி மாணவி மரணத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து, மாணவி மரணம் குறித்து விசாரிக்க சிபிசிஐடி விசாரணைக்கு ஏற்பாடு செய்திருந்தால். இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்திருக்கும்.

ஆனால் அரசும் அரசு இயந்திரமும் அசால்ட்டாக கண்டுகொள்ளாமல் இருக்க, மாணவியின் பெற்றோர் உடலை வாங்க மருத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் நான்கு நாட்களை எட்டிய நிலையில், இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த தொடங்கியுள்ளது சில சமூக அமைப்புகளும், சமூக விரோதிகளும் என்றே கூறப்படுகிறது. சரியாக 17ம் தேதி ஞாயிற்று கிழமை திட்டம்மிட்டு சமூக விரோத கும்பல் மக்கள் போராட்டத்தில் ஊடுருவியதாக கூறப்படுகிறது.

பாதுகாப்புக்கு நின்று இருந்த காவல்த்துறையினர் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடந்த தொடங்கியதுமே போராட்டம் கலவரமாக வெடித்து வேறு ஒரு திசையை நோக்கி சென்றது. கலவரக்காரர்கள் பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளை தீயிட்டு கொளுத்தி, அலுவகத்தில் வைக்கப்பட்டிருந்த பள்ளி மாணவர்களின் அனைவரின் சான்றிதழும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதில் உச்சகட்டமாக அந்த பள்ளி வளாகத்தில் இருந்த பசுமாட்டின் பால் கொடுக்கும் காம்பை அறுத்துள்ளதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

இப்படி ஓடு மீன் ஓட, உறு மீன் உருவ காத்திருக்குமா கொக்கு? என்பது போல் மாணவியின் மரணத்தை வைத்து சமூக விரோதிகள் நடத்திய கலவரத்தில், அந்த தனியார் பள்ளி மொத்தமும் சூறையாடப்பட்டுள்ளது. அந்த பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பள்ளியை மட்டும் குறிவைத்து கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்திய பின்னணி குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுந்துள்ளது.

பள்ளியின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் சிலர் தூண்டுதலின் பேரில் இந்த கலவரம் நடைபெற்றுள்ளதா.? சில அரசியல் கட்சிகள் அந்த பள்ளியிடம் டொனேஷன் கேட்டு இதற்கு முன்பு சென்ற போது பள்ளி நிர்வாகம் கொடுக்க மறுத்ததாக கூறப்படும் நிலையில், அந்த கோபத்தில் அந்த அரசியல் கட்சி தொண்டர்கள் இந்த போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார்களா.? இதில் உச்சகட்டமாக இந்த பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். முகம் நடந்துள்ளதும், கலவரக்காரர்கள் பள்ளி வளாகத்தில் இருந்த பசுமாட்டின் மடியை அறுத்ததாக வரும் தகவலும். இதை இரண்டையும் ஒப்பிட்டு இதன் பின்னணி குறித்து ஆராய்ந்தால் பல்வேறு அதிர்சியூட்டும் சந்தேகங்கள் எழுகிறது.

இருந்தாலும் உளவுத்துறையின் தோல்வியும், அரசின் மெத்தன போக்கும் தான் இந்த மிக பெரிய கலவரத்துக்கு காரணம் என்பதை மறுக்க முடியாது. இருந்தும் இந்த கலவரத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளும் அதன் பின்பு இருக்கும் சமூக விரோத அமைப்புகளும் கண்டறியப்பட்டு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனபதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு கூட. இதை தான் தூத்துக்குடி கலவரத்தின் போது ரஜினிகாந்த் சொன்னார் கலவரத்தில் சமூக விரோதிகள் ஊடுருவிட்டனர், எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் நாடு சுடுகாடாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நடிகரால் தெருவுக்கு வந்த லிங்குசாமி.. தெலுங்கு நடிகரால் தலைமிர்ந்தது எப்படி தெரியுமா.?