ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்தி என தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த ரஜினிகாந்த், அடுத்து ஒரு வெற்றி படம் கொடுத்து தன்னுடைய சூப்பர் ஸ்டார் நாற்காலியை தக்க வைத்து கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. ரஜினியின் தர்பார் , அண்ணாத்தே தோல்விக்கு பின்பு சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை மிக பெரிய அளவில் விவாத பொருளாக மாறியது.
இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழாவில் வெகுநாள் மனதில் வைத்திருந்த விஷயங்களை கொட்டித் தீர்த்தது போல் இருந்தது ரஜினிகாந்தின் பேச்சு. . முன்னதாக அண்ணாத்த படம் பல்வேறு நெகட்டிவ் விமர்சனங்களால் தாக்கப்பட்டது, எனவே ரஜினிக்கு ஜெயிலர் படம் முக்கியமான படமாக பார்க்கப்பட்டது, அதேபோலத்தான் பீஸ்ட்டில் அடி வாங்கிய நெல்சனுக்கு ஜெயிலர் அவருடைய சினிமா கேரியரை நிர்ணயம் செய்ய கூடிய படமாக பார்க்க பட்டது.
அதே நேரத்தில், நெல்சனுக்கு ஒரு கம்-பேக் படமாக ஜெயிலர் இருக்கும் என எதிர்பார்க்க பட்டது. மேலும் ஜெயிலர் படம் பேன் இந்தியா படமாக வெளியாகி அணைத்து மொழிகளிலும் வசூல் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடா என தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களை களமிறக்கிய சன் பிக்சர்ஸ் நிறுவனம் பல கோடிகளை கொட்டி படத்தைத் தயாரித்துள்ளது.
எனவே, நெல்சன் மட்டுமின்றி, சன் பிக்சர்ஸ் நிறுவனமும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் படத்தை தயாரித்து ரிலீஸ் செய்துள்ளது. இந்நிலையில், திரையரங்குகளில் நேற்று வெளியான ஜெயிலர் படத்திற்கு ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜெயிலர் என்ற ஒற்றை திரைப்படம், நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவரின் கூட்டணிக்கும் பெரும் புகழைச் சேர்த்து வருகிறது.
பீஸ்ட் படுதோல்வியால் நெல்சன் மீது ஒரு வித அச்சத்தில் இருந்த ரஜினி ரசிகர்கள், ஜெயிலர் படம் வெளியான நெல்சனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். ரஜினிக்கேற்ற ஒரு சபடம் என பல பாசிட்டிவ் விமர்சனகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு ஜெயிலர் படம், திரும்பும் பக்கமெல்லாம் பாசிட்டிவ் ரிவியூவை குவித்து வந்தாலும், ஒரு படத்தின் வெற்றிக்கு முதல் நாள் வசூல் என்பது ரொம்பவே முக்கியம் அல்லவா?
அதிலும் முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றால் கண்டிப்பாக இந்த வசூல் நூறு கோடியாக தான் இருக்க வேண்டும் என கோலிவுட்டில் எழுதப்படாத விதி ஒன்று உள்ளது. தற்போது, ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய ரிப்போர்ட் அரசல் புரசலாக வெளியாகி இருக்கிறது. அந்த ரிப்போர்ட்டின் படி, வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 26 கோடியை வசூல் செய்துள்ளது.
இதேபோல, கேரளாவில் 5.85 கோடியும், கர்நாடகாவில் 11.85 கோடியும், ஆந்திராவில் 12 கோடியும், மற்ற மாநிலங்களில் மூன்று கோடியும், ஓவர்சீஸ் நாடுகளில் 40 கோடியும் வசூல் ஆகி முதல் நாள் வசூல் 98.70 கோடியாக வந்திருக்கிறது. அதிலும் நூறு கோடியை நெருங்க சில கோடி வித்தியாசங்களே உள்ளன. இருப்பினும், முதல் நாள் 100 கோடி வசூல் என்ற சாதனையை படைக்க ஜெயிலர் படம் திணறி வருவதாகத் தகவல்கள் வெளியாகின.
ஆனால், ரிலீஸாகி இரண்டாவது நாள், ஜெயிலர் படம் வசூலில் விட்டதை பிடித்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஆம், இரண்டாம் நல்ல நிலவரப்படி ஜெய்லர் படம் 100 கோடி வசூலை தாண்டி விட்டது. சில வருடங்களுக்குப் பிறகு, ரஜினியின் படம் இப்படி ஒரு ஹிட் அடித்திருக்கிறது என்பது அவருடைய ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. படையப்பா படத்தில் “துண்டு ஒருமுறைதான் தவறும்” என்று ரஜினி கூறியதைப் போல இந்த படம் ரஜினிகாந்த்தின் எதிர்பார்ப்பை மட்டுமின்றி ரசிகர் பட்டாளத்தின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.