ஒரே நாட்டில் திரிஷா – விஜய்…. லண்டனுக்கு மனைவியை பார்க்க விஜய் போகலையா?

0
Follow on Google News

கடந்த சில மாதங்களாகவே நடிகைகளுடன் தொடர்ந்து கிசு கிசுவில் சிக்கி வரும் நடிகர் விஜய், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் விஜய் உடன் இணைத்து வெளியான கிசு கிசு கோலிவுட் வட்டாரங்களில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கீர்த்தி சுரேஷ் தற்பொழுது முழுக்க முழுக்க விஜய் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார் என்றும், விஜய் கண் பார்வையிலே கீர்த்தி சுரேஷ் இருக்க வேண்டும் என்பதற்காக, விஜய் குடியிருக்கும் நீலாங்கரை வீட்டின் அருகிலே அவருடைய நண்பர் சஞ்சய் குடியிருக்கும் வீட்டின் மாடியில் கீர்த்தி சுரேஷை குடி வைத்துள்ளார் விஜய் என்கிற தகவல் ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் – விஜய் கிசு கிசு செய்திகளுக்கு மேலும் தீனி போடுவது போன்று அமைந்தது.

விஜய் நண்பர் வீட்டு மாடியில் கீர்த்தி சுரேஷ் குடியிருப்பதை கையும் களவுமாக பிடித்து சில ஊடகங்கள் ஒரு பக்கம் செய்தி வெளியிட்டு கொண்டிருக்கையில், மறுப்பக்கம் கடந்த சில மாதங்களாக விஜய் அவரது மனைவி சங்கீதா இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை விட்டு பிரிந்து லண்டனில் சங்கீதா இருந்து வருவதாகவும், அதனால் தான் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் கூட சங்கீதா கலந்து கொள்ளவில்லை என ஒரு பக்கம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் விஜய் தீடிரென லண்டன் பயணம் மேற்கொண்டதாக செய்திகள் வெளியானது, லண்டனில் இருக்கும் மனைவியை பார்க்க தான் விஜய் லண்டன் சென்றுள்ளதாகவும், குறிப்பாக ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் , சில நாட்கள் ஒவ்வுக்காக குடும்பத்துடன் விஜய் வெளிநாடு செல்வது வழக்கம், அதில் அதிகம் விஜய் மாமனார் இருக்க கூடிய லண்டனுக்கு அடிக்கடி செல்ல கூடியவர்.

அந்த வகையில் ஏற்கனவே மாமனார் வீட்டில் இருக்கும் மனைவியை பார்க்க தான் விஜய் லண்டன் சென்றுள்ளார் என்கிற செய்தி பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் விஜய் தற்பொழுது லண்டன் செல்லவில்லை அவர் நார்வேயில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதே நார்வே நாட்டில் தான் நடிகை திரிஷாவும் இருப்பதாக தகவல் வெளியாகி தற்பொழுது கோலிவுட் வட்டாரத்தில் விஜய் – திரிஷா இருவடைய கிசு கிசு மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் நடிகர் விஜய் மனைவியை பார்க்க லண்டன் சென்றுள்ளார், அவர் குடுமபத்துடன் ஓய்வு நாட்களை சந்தோசமாக கழித்து வருகிறார் என ஒரு பக்கம் பேசப்பட்டு வந்த நிலையில், திரிஷா இருக்கும் நார்வே நாட்டில் விஜய்க்கு என்ன வேலை என்றும், அதே நேரத்தில் தற்பொழுது நார்வேயில் திரிஷாவுக்கு ஏதும் படப்பிடிப்பும் இல்லை, அப்படி இருக்கையில் ஒரே நாட்டில் விஜய் – த்ரிஷா இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பல்வேறு கிசு கிசுக்களை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே விஜய் – த்ரிஷா இருவரும், கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி என தொடர்ந்து ஜோடி போட்டு நடித்து வந்த போது இருவருக்கும் இடையில் தொடர்ந்து கிசு கிசு செய்திகள் வெளியான நிலையில், கடந்த சில வருடங்களாக விஜய் – திரிஷா ஜோடி இனைந்து நடிக்கவில்லை. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள திரிஷா, விஜய் சிபாரிசில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில்.

தற்பொழுது நார்வே நாட்டில் திரிஷா – விஜய் இருவரும் இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் விஜய் – திரிஷா வுக்கு இடையில் கிசு கிசுவை ஏற்படுத்தியுள்ளது மட்டுமில்லை, விஜய் அவரது மனைவி சங்கீதவை பார்க்க லண்டன் சென்றுள்ளார் என்கிற செய்தியை பொய்யாக்கும் வகையில் அமைத்துள்ளது விஜய் நார்வேயில் இருக்கும் தகவல் என்பது குறிப்பிடதக்கது.