ஜாபர் சாதிக் வீட்டின் CCTV வீடியோ… அமீர் மட்டுமா சிக்கும் முக்கிய சினிமா பிரபலம்… ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது…

0
Follow on Google News

இயக்குனர் அமீரின் மிக நெருங்கிய நண்பரான ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மன்னனாக செயல்பட்டு தற்பொழுது தலைமறைவாக இருக்கும் சம்பவம் இந்தியாவையே மிகப்பெரிய அளவில் மிக பெரிய அளவில் உலுக்கியுள்ளது. பொதுவாகவே சட்ட விரோதமாக தங்கம் கடத்துகின்றவர்கள், போதை பொருள் கடத்துகின்றவர்கள், ஹவாலா தொழில் செய்கின்றவர்கள்.

இவர்கள் அனைவரும் சட்ட விரோதமாக சம்பாரிக்கும் பணத்தை முதலீடு செய்யக்கூடிய முக்கிய தொழிலாக சினிமா விளங்கி வருகிறது. அந்த வகையில் நண்பர் அமீர் மூலம் சினிமாவில் படம் தயாரிக்க தொடங்கிய போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறியப்பட்டவர் . மேலும் நண்பர் அமீர் மூலமாகவே முக்கிய அரசியல் கட்சியில் அறிமுகமாகி சில முக்கிய பொறுப்புகளையும் வாங்கியுள்ளார் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்.

தன்னை மிக பெரிய கோடீஸ்வரராக வெளி உலகத்திற்கு காட்டி கொண்ட போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக், உலக அளவில் பல ஆயிரம் கோடி மதிப்புடைய போதை பொருட்களை சத்தமே இல்லாமல் செய்து வந்துள்ளார். மேலும் தன்னுடைய நண்பர் அமீர் உடன் இணைந்து பல தொழில்களை தொடங்கிய கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக். சமீபத்தில் போதை பொருள் கடத்தல் பிரிவு போலீசில் வசமாக சிக்கினார்.

இந்த நிலையில் போலீசார் கைது செய்து விடுவார்கள் என்பதை அறிந்து தலைமறைவாக இருக்கும் ஜாபர் சாதிக் வெளிநாட்டிற்கும் தப்பி செல்லாதவாறு அனைத்து விமான நிலையங்களும் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். அந்த வகையில் கடல் மார்க்கமாக கூட ஜாபர் சாதிக் தப்பிக்க முடியாதபடி மிக உஷாராக போலீசார் உள்ளனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கின் சென்னை வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த போதை பொருள் தடுப்பு போலீசார் அங்கே நடத்திய அதிரடி சோதனையில் அவர் வீட்டில் இருந்த சிசிடிவி ஃபுட்டேஜ் ஹார்ட் டிஸ்கை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் போலீசார் கைப்பற்றிய சிசிடிவி புட்டேஜில் பல முக்கிய சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களும் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் வீட்டின் உள்ளே சென்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சில முக்கிய புள்ளிகள் ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு உள்ளே சென்று விட்டு வெளியே திரும்பும் பொழுது கையில் ஒரு பையுடன் வெளியே வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் அவர்கள் கையில் பணத்துடன் வருகிறார்களா என்கின்ற சந்தேகமும் போலீசார் இருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் சி சி டிவியில் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் வீட்டின் உள்ளே சென்று திரும்பும் அனைவரையும் விசாரணைக்கு போதை பொருள் தடுப்பு போலீசார் விரைவில் சம்மன் அனுப்பலாம் என்றும்,

இதில் பல சினிமா பிரபலங்கள் சிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் போதை பொருள்கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கின் நெருங்கிய நண்பர் இயக்குனர். அமீர் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக விசாரணைக்கு ஆஜராகும்படி விரைவில் போலீசார் சாமான் அனுப்பலாம் என்றும் கூறப்படுகிறது.மேலும் சினிமா துறையிலும் சரி அரசியல் துறையிலும் சரி கடத்தல் மன்னன் ஜாபர் சாதிகை பல இடங்களில் தன்னுடைய நண்பர் என்று அறிமுகம் செய்து வைத்தவர் அமீர் தான் என்று கூறப்படுகிறது.

ஆனால் ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தலில் சிக்கியதும், இது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்பது போன்றும் அமீர் பேசியது, மேலும் தான் வட்டி விபச்சாரம் போன்ற தொழிலுக்கு எதிரான மார்க்கத்தை பின்பற்றுகின்றவன் என அமீர் பேசி வருவது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.