இயக்குனர் சங்கர் தற்பொழுது ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார், அதில் ஒன்று ஏற்கனவே அவர் இயக்கத்தில் வெளியான வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த இந்தியன் படத்தின் கதையை தழுவி இரண்டாம் 2 படமும், தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் ஒரு படமும் இயக்கி வருகிறார். இதில் ஒரு மாதத்தில் 15 நாள் ராம்சரண் படத்திற்கும், 15 நாள் இந்தியன் 2 படத்திற்கும் படத்தின் படப்பிடிப்பையும் நடத்தி வருகிறார் இயக்குனர் சங்கர்.
அந்த வகையில் இடைவிடாமல் மிக பிஸியாக இருந்த வந்த சங்கர் தற்பொழுது ராம்சரண் படத்தின் படபிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் சற்று ரிலாக்ஸ் ஆகி முழுக்க முழுக்க தன்னுடைய கவனத்தை இந்தியன் 2 படத்தில் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் கதை அரசல் புரசலாக வெளியாகி உள்ளது.
இதற்கு முன்பு வெளியான இந்தியன் படத்தில் இந்தியன் தாத்தா பல கொலைகளை செய்துவிட்டு போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக இந்தியாவில் இருந்து தப்பித்து வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார். அத்துடன் வெளிநாட்டிலிருந்து தொலைபேசி மூலம் இந்தியாவில் உள்ள போலீசாரை தொடர்புகொண்டு இந்தியனுக்கு சாவே கிடையாது என்றும் இதை நாட்டு மக்களுக்கு தெரிவியுங்கள் என கமல்ஹாசன் பேசும் அந்த காட்சியுடன் படத்தின் முடிவு இருந்திருக்கும்.
இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் வெளிநாட்டில் உள்ள இந்தியன் தாத்தா தேடப்படும் குற்றவாளியாக இருப்பதால் விமான மூலம் இந்தியாவில் உள்ள நுழைய முடியாது, அதனால் கடல் மார்க்கமாக இந்தியாவில் உள்ளே நுழைகிறார். ராமேஸ்வரம் தனுஷ்கோடி வழியாக இந்தியன் தாத்தா இந்தியா உள்ளே நுழைகிறார். சமீபத்தில் பனையூரில் ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது அதில் இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நடக்கும் சண்டை காட்சி போன்று படமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது