சிறுத்தை சிவா இயக்கும் அடுத்த படத்தில் சூர்யா நடிக்க உறுதியாகி அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன.சிறுத்தை சிவா தமிழில் அறிமுகமான திரைப்படம் சிறுத்தை. இது தெலுங்கில் வெளியான விக்ரமார்க்குடு என்ற படத்தின் ரீமேக். கார்த்திக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்ததால், அவரை அப்படியே அமுக்கி சூர்யாவை வைத்து படம் இயக்க ஒப்பந்தம் செய்தார் ஸ்டுடியோக்ரின் நிறுவனத்தின் அதிபர் ஞானவேல் ராஜா.
ஆனால் அடுத்தடுத்து அஜித் படங்களை இயக்கியதால் சிறுத்தை சிவாவால் அந்த படத்தை இயக்க முடியவில்லை. இதற்கிடையில் விஸ்வாசம், அண்ணாத்த போன்ற பெரிய படங்களை இயக்கி முடித்துவிட்டு இப்போது சூர்யா படத்துக்கு வந்துள்ளார் சிவா. இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.
இதற்கிடையில் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. ஒப்பந்தம் போட்டபோது சிவாவுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் போடப்பட்டுள்ளது. ஆனால் இப்போது சிவாவின் சம்பளம் 18 கோடி ரூபாயாம். அதனால் சூர்யா படத்துக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படும் என்பதில் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது.