வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தயாராகியுள்ள தமிழக அரசியல் கட்சிகள் அதற்கான வியூகத்தை தற்பொழுது இருந்து தொடங்கியுள்ளனர். இதில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என தெரிய வருகிறது. மேலும் திமுக கூட்டணியில் கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை விட குறைந்த தொகுதியின் இம்முறை முறை ஒதுக்கினாலும், கொடுத்த தொகுதிகளை பெற்றுக்கொண்டு கூட்டணி கட்சிகள் கூட்டணியில் தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
இதனால் திமுக கூட்டணியில் பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதே நேரத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகள் இம்முறை அதிமுக இரண்டாக உடைந்து சின்னாபின்னமாகி இருப்பதால் அதிமுக தலைமையை அதன் கூட்டணி கட்சிகள் ஏற்பதற்கான சாத்தியம் இல்லை என்று தெரிகிறது.
அந்த வகையில் சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று 25 பாஜக எம்பிகள் நாடாளுமன்றம் செல்வார்கள் என்று அண்ணாமலையின் இந்த பேச்சு, பாஜக தலைமையில் தான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி என்பதை வெளிப்படுத்தியுள்ளது, அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற முக்கிய கட்சிகளான பாமகவின் முக்கிய தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்துள்ளார்.
அதற்கான வியூகத்தை 2024 நாடாளுமன்றத் தேர்தலிலே அமைப்போம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளது. வட மாவட்டங்களில் வலுவாக இருக்கும் பாமக தனி வியூகம் அமைப்போம் என தெரிவித்துள்ளது. எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கு மிகப்பெரிய சிக்கலை தான் ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் அன்புமணியின் இந்த அறிவிப்பு பின்னணியில் பாஜக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தங்கள் தலைமை கூட்டணியில்தான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள், அந்த வகையில் ஓபிஎஸ், எடப்பாடி, பாமக ஆகியோருக்கு தொகுதியை தலைமை தாங்கி ஒதுக்கும் முடிவு பாஜக தான் எடுக்கும் என்றும், அதற்கான முயற்சியில் பாஜக தற்பொழுது இறங்கியுள்ளது, இந்த முயற்சிக்கு துணையாக தான் அன்புமணி ராமதாஸ் தேர்தலில் தனி வியூகம் என்கிற இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமருக்கான தேர்தல் என்பதால் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரித்தும், பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம்பெறும் என்பதைத்தான் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார், அதே நேரத்தில் ஒருங்கிணைந்த அதிமுகவை தான் பாஜக விரும்புகிறது. ஆனால் அதிமுக மீண்டும் ஒருங்கிணைவதற்கான வாய்ப்புகளை எடப்பாடி பழனிச்சாமி ஏற்படுத்த மாட்டார்.
இதனால் பாஜக தலைமையில் கூட்டணியை எடப்பாடி என்றாலும் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதே நேரத்தில் மெகா கூட்டணி என அறிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் ஏற்கனவே இருந்த பிரதான முக்கிய கட்சிகள் எடப்பாடி தலைமையை ஏற்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்கிறது அரசியல் வட்டாரங்கள்.
இந்த நிலையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியை எடப்பாடி பழனிச்சாமி ஏற்காத பட்சத்தில், அரசியல் அனாதையாக எடப்பாடி தலைமையிலான அதிமுக தனியாகத்தான் போட்டியிடும் என்றும், அச்சமயத்தில் எடப்பாடியுடன் இருக்கும் பல அதிமுக தலைவர்கள் அவரிடமிருந்து விலகி பல்வேறு கட்சிகளில் இணைவார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது.