நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது அவரின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான கே எஸ் ரவிக்குமார் என்றுதான் சொல்லப்படுகிறது. அண்ணாத்த படத்தின் கலவையான விமர்சனங்கள் மற்றும் சுமாரான வசூல் காரணமாக அடுத்து உடனடியாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த். இதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.
அந்த பட்டியலில் இளம் இயக்குனர்களான தேசிங் பெரியசாமி, கார்த்திக் சுப்பராஜ் மற்றும் பாண்டிராஜ் ஆகியவர்கள் இருப்பதாக சொல்லப்பட்டன. ஆனால் அதில் ஒரு திருப்புமுனையாக சீனியர் இயக்குனர் ஒருவர் இணைந்துள்ளார். ரஜினியை வைத்து முத்து, படையப்பா ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய கே எஸ் ரவிக்குமார் பெயரும் இடம்பெற்றுள்ளதாம்.

இதற்காக கே எஸ் ரவிக்குமார் தன்னுடைய கதை விவாத குழுவோடு கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறாராம். அதனால் அடுத்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இருவரும் கடைசியாக இணைந்து பணிபுரிந்த லிங்கா திரைப்படம் தோல்வி அடைந்ததால் இவர்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

