ஆந்திராவின் விஜயவாடாவில் நடைபெற்ற என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது, ஐதராபாத் நகரின் வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடுவே காரணம் என்று புகழ்ந்து பேசியிருந்தார். குறிப்பாக ஹைதரபாத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் சந்திரபாபு நாயுடுதான் காரணம் என்று புகழந்து தள்ளினார். ரஜினிகாந்த் இந்த பேச்சு ஆந்திர அரசியலில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகையும் ஆந்திர மாநில இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஜா மிக கடுமையாக ரஜினிகாந்துக்கு பதிலடி கொடுத்துள்ளார், கடந்த 2003-ம் ஆண்டுடன் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலம் முடிந்துவிட்டது, அதன் பின் 20 ஆண்டுகள் ஹைதராபாத் பெரும் வளர்ச்சி அடைந்ததற்கு சந்திரபாபு நாயுடு எப்படி காரணமாக இருக்க முடியும் என்பதை ரஜினிகாந்த் நினைத்து பார்க்க வேண்டும் என தெரிவித்த ரோஜா.
மேலும் அதோடு, என்டி ராமராவ் மரணத்திற்கு சந்திரபாபு நாயுடு தான் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும், அவர் தன் இறுதி காலத்தில் சந்திரபாபு நாயுடு ஒரு திருடன் என்றும் அவரை யாரும் நம்பாதீர்கள் என்று தெரிவித்தவர். ரஜினி அவர்களுக்கு இது தெரியவில்லை என்றால் என்டி ராமராவ் பேசிய சிடியை அவருக்கு அனுப்பி வைக்கவும் தயாராக இருக்கிறேன்.
ரஜினிகாந்த் மீது ஒரு நடிகராக எனக்கு மரியாதை உள்ளது, ஆனால் அதே நேரத்தில் சந்திரபாபு குறித்து நேற்று அவர் பேசியது சிரிப்பை தான் வரவழைத்தது, அவரது பேச்சை ஏற்றுக்கொள்ளமுடியது என்றும், ரஜினிகாந்த் அரசியல் வேண்டாம் என்று நினைத்துவிட்டார். வேண்டாம் என்று நினைத்தபிறகு அரசியல் பேசக்கூடாது. என்டி ராமராவை எல்லோரும் கடவுளாக பார்ப்பார்கள்.
அவரை எப்படி கொன்றார்கள், அவரது மரணத்திற்கு காரணம் யார் என்பது ரஜினிகாந்துக்கு தெரியும். நான் நினைத்தேன் ரஜினிகாந்த் தெரியாமல் தவறாக பேசிவிட்டார் என்று. ஆனால் தெரிந்தே தவறாக பேசியுள்ளார் என்பது தான் கஷ்டமாக இருக்கிறது. தெலுங்கர்கள் ரஜினிகாந்தை ஒரு சூப்பர் ஸ்டாராக, நல்ல நடிகராக பார்த்தனர். ஆனால் அவர் பேசியதை பார்த்து அனைவரும் கோபத்தோடு இருக்கின்றனர்.
ஏனென்றால் என்டி ராமாராவை யார் கொலை செய்ய திட்டம் போட்டாரோ அவரை நல்லவர் என்று சொன்னது மட்டுமின்றி, மேலே இருந்து ஆசி வழங்குவார் என்று சொன்னது பெரிய தவறு. அரசியலுக்கு வரவேண்டும் என்ற விருப்பம் இல்லாதபோது தெலுங்கு மாநில அரசியல் குறித்து எதுவும் தெரியாமல் பேசக்கூடாது என ரஜினிகாந்தை எச்சரிக்கும் விதத்தில் பேசிய நடிகை ரோஜா.
சந்திரபாபு நாயுடு வீட்டுக்கு அழைத்தார், சாப்பாடு போட்டார், ஒரு ஸ்கிரிப்டை கொடுத்தார். சாப்பிட்டுவிட்டு அவர் கொடுத்த ஸ்கிரிப்டை படித்துவிட்டு சொல்வது என்பது சரியல்ல. ரஜினிகாந்த் என்றால் பெரிய அளவில் பார்த்தோம். ஆனால் இன்று அவர் ஜீரோவாக ஆகிவிட்டார். இனிமேல் எந்த நடிகரும் ஒரு மாநிங்கலத்துக்கு செல்லும்போது, அந்த மாநிலம் குறித்து தெரிந்தால் பேச வேண்டும். இல்லாவிட்டால் அமைதியாக வந்துவிடுவது நல்லது என ரஜினிகாந்தை மிக கடுமையாக பேசியியிருந்தார் ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா.
இந்நிலையில் ரஜினி மீதான ரோஜாவின் விமர்சனத்தை வன்மையாக கண்டிப்பதாக ரஜினிக்கு ஆதரவாக தெலுங்கு தேச கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.மேலும் நடிகர் ரஜினி மீது திட்டமிட்டு தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும், இதனை மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என்றும் குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு, ஒய்எஸ்ஆர் கட்சியினரை அக்கட்சி தலைவர் ஜெகன்மோகன் கட்டுக்குள் கொண்டு வருவதுடன், அந்த கட்சியினர் ரஜினியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ரஜினிகாந்த் பேசிய பேச்சால் ஆந்திர அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரபரப்புக்கு மத்தியில் சந்திரபாபுவுக்கு எதிரான அரசியல் கட்சிகள் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தை புறக்கணிப்போம் என குரல் கொடுத்து வருவதால், ஆந்திராவில் ஜெயிலர் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.எது எப்படி இருப்பினும் ஆந்திர மாநிலத்தில், தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு ஆகிய இருவருக்கும் இடையேயான அரசியல் போட்டியில் நடிகர் ரஜினிகாந்த் பலிகடா ஆக்கப்பாடிருக்கிறார் என்பதுதான் உண்மை…