மனைவியுடன் நடிக்க விக்னேஷ் சிவன் போடும் கண்டிஷன்… நயன்தாராவுடன் ஜோடி சேரும் கமல்ஹாசன்…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்கின்ற அடைமொழியுடன் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த நடிகை நயன்தாரா, பில்லா படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த போதும், வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த படங்களில் எல்லை மீறி கவர்ச்சி காட்டி இருப்பார், இதற்கு மேல் யாரும் கவர்ச்சி காட்ட முடியாது என்று சொல்லும் அளவுக்கு தாராளமாக கவர்ச்சி உடையில் நடித்திருப்பார் நயன்தாரா.

இந்நிலையில் திருமணத்திற்கு பின்பு நயன்தாரா நடிக்கும் படத்தின் இயக்குனர்களிடம் கடும் கண்டிஷனை போடுகிறாராம் அவரது கணவர் விக்னேஷ் சிவன், மனைவியை படத்தில் கவர்ச்சியாக காட்டக் கூடாது, ஹோம்லி லுக்கிலும், ஓரளவு மாடன் லுக்கிலும் தான் மனைவி நயன்தாராவை நடிக்க வைக்க வேண்டும் என்று இயக்குனர்களிடம் விக்னேஷ் சிவன் கண்டிஷன்போட்டு வருகிறாராம்.

அந்த வகையில் திருமணத்திற்கு பின்பு அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நயன்தாரா கலந்து கொள்வதற்கு முன்பு இதே கண்டிஷனை அட்லியிடம் வைத்துள்ளார் விக்னேஷ் சிவன். அதற்கு அட்லி மிகப்பெரிய ஸ்டார் நடிகரான ஷாருக்கான் படத்தில் ஓரளவு கவர்ச்சி இருக்கலாமே என்று கேட்டதற்கு, அதற்கு விக்னேஷ் சிவன் அதெல்லாம் முடியவே முடியாது என மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நயன்தாரா தற்பொழுது அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார், அதில் கமிட்டாகும் இயக்குனர்களை ஆரம்பத்திலேயே தனியாக அழைத்து எப்படி எல்லாம் தனது மனைவிக்கு சீன் வைக்க வேண்டும், காஸ்டியூம் எப்படி இருக்க வேண்டும், நடிகர்களுடன் நெருக்கமாக எந்த அளவுக்கு நடிக்க வேண்டும் என்பது வரை கடும் கண்டிஷன்களை வைத்துள்ளாராம் விக்னேஷ் சிவன்.

இதனால் விக்னேஷ் சிவனின் கடும் டார்ச்சர் காரணமாக உன் மனைவியை நீ ஹோம்லி பெண்ணாக வீட்டிலே வைத்து கொள் என்று முன்னணி இயக்குனர்கள் இயக்கம் படங்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் நயன்தாராவுக்கு அமையாமல் போகிறது.இந்நிலையில் தற்பொழுது இந்தியன் 2 படத்தில் நடித்துவரும் கமலஹாசன் இந்த படத்தை முடித்துவிட்டு ஹெச். வினோத் இயக்கம் ஒரு படத்தில் நடிக்கிறார்.

அதை முடித்து விட்டு மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அண்மையில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாரா பேசுகையில். எல்லா நடிகைகளை போன்று எனக்கும் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படத்தில்லாவது நடித்து விட வேண்டும் என்கின்ற ஆசை உள்ளது.

அவர் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தபோது ஒரு சில காரணங்களால் அது கைகூடவில்லை என பொது மேடையிலேயே தற்போது மணிரத்தினம் இயக்கும் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை வெளிப்படையாக கேட்டிருந்தார் நயன்தாரா. அந்த வகையில் மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்பொழுது மற்ற இளம் இயக்குனர்கள் மற்றும் புதுமுக இயக்குனர்களிடம் மனைவியை கவர்ச்சியாக நடிக்க வைக்க கூடாது, ஹோம்லி பெண்ணாக தான் நடிக்க வைக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுவது போன்று இயக்குனர் மணிரத்தினத்திடம் விக்னேஷ் சிவன் பேசுவதற்கான வாய்ப்பே இல்லை. அதே நேரத்தில் தற்பொழுது மார்க்கெட்டில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ள நயன்தாரா.

மணிரத்தினத்திடம் எந்த ஒரு கண்டிஷனும் இல்லாமல் அவர் சொல்வதைக் கேட்டு நடிக்க வேண்டும் என்றும் குறிப்பாக மணிரத்தினம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்கிற முடிவில் நயன்தாரா இருப்பதால், மற்ற இயக்குனர்களிடம் கொடுக்கும் டார்ச்சர் போன்று மணிரத்தினத்திடம் விக்னேஷ் சிவன் எதாவது பேசி இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு நயன்தாராவுக்கு பறிபோனால், விக்னேஷ் சிவனுக்கு – நயன்தாராவுக்கு இடையிலே பெரும் பூகம்பம் வெடிக்கும் என்கிறது சினிமா வட்டாரங்கள்..