அஜித்துக்கு தண்ணி காட்டும் விக்னேஷ் சிவன்… செம்ம அப்செட்டில் அஜித்..! என்ன நடந்து தெரியுமா..!

0
Follow on Google News

நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை படத்தின் இயக்குனர் ஹெச். வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் போன்ற இதே கூட்டணியில் அஜித் நடிக்கும் அடுத்த படமான AK 61 படத்தில் இணைகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு, அஜித் நடிக்கும் AK 62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார், லைக்கா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது, இந்த படத்துக்கு 105 கோடி வரை அஜித்துக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் படத்தை இயக்கம் வாய்ப்பு கிடைக்காமல் பல முன்னனி இயக்குனர்கள் தவித்து கொண்டிருக்கையில், அஜித் நடிக்கும் AK 62 படத்தை இயக்கும் வாய்ப்பு எப்படி விக்னேஷ் சிவனுக்கு கிடைத்தது என உச்சகட்ட பொறாமையில் உள்ளனர், தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர்கள் பலர். போடா போடி திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன், அந்த படத்திற்கு பின்பு அடுத்த படம் இயக்க வாய்ப்புகள் கிடைக்காமல் ஒவ்வொரு நடிகரிடம் கதை சொல்லி யாரும் நடிக்க முன் வரவில்லை.

இந்த இடைப்பட்ட காலத்தில் வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் உடன் சிறிய வேடத்தில் நடித்தார் விக்னேஷ் சிவன், அப்போது தனுஷ் தயாரிப்பில் புதிய படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து நயன்தாராவை வைத்து நானும் ரௌடி தான் படத்தை இயக்கினார். இந்த படத்தில் இருந்து நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருகின்றனர். இதன் பின்பு நயன்தாரா சிபாரிசில் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார் அந்த படம் படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் மீண்டும் நயன்தாரா சிபாரிசில் நடிகர் அஜித் நடிக்கும் AK 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். அஜித் – நயன்தாரா இருவருக்கும் இடையில் நல்ல நட்பு உள்ளது அதன் அடிப்படையில் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பின் போதே விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு கேட்டிருந்தார் நயன்தாரா, அதற்கு பார்க்கலாம் என்று அஜித் தெரிவித்துள்ளார். வலிமை படம் வெளிவந்த பின்பு அஜித்தை தொடர்பு கொண்டு காதலன் விக்னேஷ் சிவன் கைவசம் ஒரு கதை உள்ளது உங்களை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் வேண்டும் என நயன்தாரா கேட்டுள்ளார்.

இதன் பின்பு நடிகர் அஜித்தை நேரில் சந்தித்து கதை சொல்லியுள்ளார் விக்னேஷ் சிவன். கதை அஜித்துக்கு பிடித்து போக, ஏற்கனவே லைக்கா புரொடக்ஷன் அஜித்திடம் கால் சீட் கேட்டிருந்த நிலையில், விக்னேஷ் சிவனை லைக்கா புரொடக்ஷனுக்கு அனுப்பியுள்ளார். இதன் பின்பு AK 62 படத்தில் அஜித், விக்னேஷ் சிவன், லைக்கா புரொடக்ஷன் கூட்டணி உறுதியானது. இதனை தொடர்ந்து அந்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார் விக்னேஷ் சிவன்.

இந்த படத்தில் அனிரூத் இசை அமைக்க அவருக்கு 5 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது, கதாநாயகியாக நயன்தாரா நடிக்க 10 கோடி வேண்டும் என விக்னேஷ் சிவன் கேட்டுள்ளார், அதற்கு தயாரிப்பு நிறுவனம் சரி என்று தெரிவித்துவிட்டது. இந்நிலையில் இயக்குனர் சம்பளம் 10 கோடி கேட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இதற்கு தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ஒத்துக்கொள்ளவில்லை, ஆனால் விக்னேஷ் சிவன் ஒரே பிடியாக இருப்பதால்,

மிகவும் சிரமப்பட்டு நடிகர் அஜித்திடம் கால்ஷீட் வங்கியுள்ளோம், இதில் எதாவது பிரச்சனை என்றால் திரும்ப அவரிடம் கால் சீட் கிடைக்குமா என்பது சந்தேகம், அதனால் விக்னேஷ் சிவன் கேட்ட 10 கோடி சம்பளத்தை தருவதாக ஒப்பு கொண்டுள்ளனர் லைக்கா நிறுவனம். இந்த தகவல் அறிந்த நடிகர் அஜித் தன்னை வைத்து விக்னேஷ் சிவன் தயாரிப்பு நிறுவனத்துக்கு நெருக்கடியை கொடுத்து அவருடை சம்பளம் அதிகமாக கேட்டுள்ளதால் விக்னேஷ் சிவன் மீது கடும் அப்செட்டில் அஜித் இருப்பதாக கூறப்படுகிறது.

கடனில் தத்தளிக்கும் சிவகார்த்திகேயன்… கடனை அடைக்க எடுத்த அதிரடி முடிவு.. கதறி ஆளும் குடும்பத்தினர்.