2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ‘போடா போடி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடி தான்’ படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தை இயக்க கமிட் ஆனார் விக்னேஷ் சிவன். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க இருந்த சமயத்தில், விக்னேஷ் சிவனை அப்படத்தில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக மகிழ் திருமேனியை கமிட் செய்து அதிரடி காட்டினார் அஜித். விக்னேஷ் சிவன் சொன்ன கதை திருப்தி அளிக்காததால், அவரை ஏகே 62 படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், விக்னேஷ் சிவன் அடுத்ததாக யாருடன் கூட்டணி அமைக்க உள்ளார் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, உலகநாயகன் கமலஹாசனின் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருக்கும் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியானது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் விக்கி மற்றும் பிரதீப் அறிவித்திருந்தார்கள்.
விக்னேஷ் சிவன் அவர்கள் தன்னுடைய கனவு திரைப்படமான எல்ஐசி என்ற படத்தை எடுக்க முடிவெடுத்து இருக்கிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க வைக்கிறார். பிரதீப் ரங்கநாதனுக்கும் விக்னேஷ் சிவன் சொன்ன கதை பிடித்து போனதால் சம்மதம் சொல்லிவிட்டார். மேலும், இந்த படத்தை நடிகர் கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. இதற்கான சூட்டிங் வேலையில் விக்கி ரெடியாகி கொண்டிருந்தார்.
இப்படி இருக்கும் நிலையில் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கும் பொறுப்பில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு முழுக்க காரணம், பிரதீப் ரங்கநாதன் என்று கூறப்படுகிறது. அதாவது, பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தில் நடிக்க அதிகமாக சம்பளம் கேட்டு இருக்கிறார். ஆனால், அதை கமல் நிறுவனம் தர மறுத்து இருக்கிறது.
அதிலும் படத்தின் பட்ஜெட் 60 கோடி என விக்னேஷ் சிவன் சொன்னதால், ராஜ்கமல் பிலிம்ஸ் ஓகே சொல்லவில்லையாம். இதில் விக்னேஷ் சிவன் சம்பளம் 10 கோடியாகவும், பிரதீப் ரங்கநாதனின் சம்பளம் 20 கோடி என்றும் சொல்லப்படுகிறது. இதனைக் கேட்ட கமல்ஹாசன் ஆடிப்போய்விட்டாராம். ஒரு படத்தில் ஹிட் கொடுத்துவிட்டு 20 கோடி சம்பளம் என்றால் செட் ஆகாது என நோ சொல்லிவிட்டாராம்.
அப்படியிருந்தும் பிரதீப் ரங்கநாதன் தனது சம்பளத்தை குறைக்கவில்லையாம். பின் ராஜ்கமல் நிறுவனம் இந்த படத்தில் இருந்து விலகி விட்டது. தற்போது இந்த படத்தை லலித் செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. தொடர் விலகல்களால் விக்னேஷ் சிவன் நொந்து போய் இருந்த வேளையில் தற்பொழுது லியோ படத்தைத் தயாரித்த லலித்குமார் இப்படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.
இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின் நடிக்கின்றனர். ஒரே படத்தில் மூன்று இயக்குநர்களை வைத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் படம் இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நடிக்க பிரதீப் 20 கோடிக்கு சம்பளம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. பிரதீப் ரங்கநாதனின் சம்பளம் 20 கோடியா என இப்போது கோலிவுட்டே அதிர்ச்சியில் இருந்து மீளவில்லையாம்.
அதேபோல், அனிருத் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காதலை பின்னணியாக வைத்து ரொமான்ஸ் ஜானரில் இந்தப் படம் உருவாகவுள்ளதாம். மேலும் லவ் டுடே படத்தைப் போல மொபைல் டெக்னாலஜியையும் பின்னணியாக வைத்து இயக்கவுள்ளாராம் விக்னேஷ் சிவன். விரைவில் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை தொடங்க விக்னேஷ் சிவன் முடிவுசெய்துள்ளாராம்.