கணவர் மீது 16 வயது சிறுமி புகார்… கண்ணீர் விட்டு கதறிய ஷங்கர் மகள்..! ஷங்கர் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் சங்கர் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த வருடம் ஜூன் மாதம் பிரபல தொழில் அதிபர் தாமோதரன் மகன் ரோகித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தாமோதரன் தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் விளையாடும், மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளராவார். இவரது மகன் ரோஹித், புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற ஐஸ்வர்யா – ரோஹித் திருமணம் கொரோனா தொற்று காரணமாக முக்கிய பிரமுகர்கள் மட்டும் பங்கு பெரும் வகையில் குறைந்த நபர்களே கலந்து கொண்ட திருமண நிகழ்வாக அமைத்தது.

இந்நிலையில் தற்பொழுது கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடந்த திட்டமிட்டு அதுக்காக சுமார் ஆறு கோடி செலவில் பிரமாண்ட செட் அமைக்கும் பனி, விலை உயர்ந்த அழைப்பிதழ் என மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை தனது சினிமா போன்று பிரமாண்டமாக நடத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் ஷங்கர்.

மே 1ம் தேதி நடைபெற இருந்த திருமண நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக ஷங்கர் தரப்பில் அழைப்பிதழ் கொடுத்த விருந்தினருக்கு குறு செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது. எதற்காக ரத்து செய்யப்பட்டுள்ளது என கரணம் தெரிவிக்கவில்லை, இந்நிலையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஷங்கரின் மருமகன் ரோஹித் மீது போக்ஸோ வழக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதிவு செய்யப்பட்டிருந்தது.

தனியார் பள்ளியில் 11 வகுப்பு படித்து வரும், ரூபா என்கிற பெண் கொடுத்த புகாரில், புதுச்சேரியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறேன். அங்கிருந்த சீனியர் பிளேயர் தாமரை கண்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரியின் கேப்டன் ரோகித்தை சந்தித்து தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து தெரிவித்த போது, இது ஒரு பெரிய விஷயம் இல்லை என தெரிவித்துவிட்டார்.

மேலும், இங்கு விளையாடும் அனைத்து பெண்களும் இப்படியான தொல்லைகளை தாண்டி தான் வருகிறார்கள். நீ அனுசரித்து போ என்று ரோஹித் சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார். இதன் பின்பு கூட பயிற்சியாளர் தாமரை கண்ணன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அவர் கூறுவதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் எனக்கு பயிற்சி கொடுக்க மாட்டேன் என்றும் என்னை மிரட்டினார் என 16 வயது சிறுமி கொடுத்த புகாரில் கடந்த அக்டோபர் மாதம் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதில் இயக்குனர் ஷங்கர் மருமகன் ரோகித் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் பின்பு ஐஸ்வர்யா – ரோஹித் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஐஸ்வர்யா இது குறித்து தந்தையிடம் ஏதும் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார், தற்பொழுது கணவர் -மனைவிக்கு இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளதால், வேறு வழியின்றி கண்ணீர் விட்டு தந்தை ஷங்கரிடம் கதறியுள்ளார் ஐஸ்வர்யா என கூறப்படுகிறது. இதன் பின்பு தான் மகளின் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியை ஷங்கர் ரத்து செய்ததாக கூறப்படுகிறது.

விரட்டியடித்த அஜித்… விஜய் விட்டு கதவை தட்டிய வடிவேலு..! அஜித் கோபத்துக்கு என்ன காரணம் தெரியுமா.?