பத்து மாதத்தில் முடிவுக்கு வந்த ஷங்கர் மக்களின் திருமண வாழ்க்கை..! என்ன பிரச்சனை தெரியுமா.?

0
Follow on Google News

பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இரண்டு மகள்களும் மருத்துவம் படித்து முடித்தனர், இரண்டாவது மகள் அதீதி தற்பொழுது முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடிகர் கார்த்திக் ஜோடியாக நடித்து வருகிறார். சினிமா மீது மிகுந்த ஆசையில் இருந்த அதீதி ஆசைக்கு ஒரே படத்தில் நடித்துவிட்டு, அதன் பின்பு மருத்துவ துறையில் கவனம் செலுத்த வேண்டும் என தந்தை சங்கர் கட்டளையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த வருடம் ஜூன் மாதம் பிரபல தொழில் அதிபர் தாமோதரன் மகன் ரோகித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தாமோதரன் தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் விளையாடும், மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளராவார். இவரது மகன் ரோஹித், புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற ஐஸ்வர்யா – ரோஹித் திருமணம் கொரோனா தொற்று காரணமாக முக்கிய பிரமுகர்கள் மட்டும் பங்கு பெரும் வகையில் குறைந்த நபர்களே கலந்து கொண்ட திருமண நிகழ்வாக அமைத்தது.

இந்நிலையில் தற்பொழுது கொரோனா தொற்று முடிவுக்கு வந்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில், மகள் ஐஸ்வர்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சியை மிக பிரமாண்டமாக நடந்த திட்டமிட்டார் இயக்குனர் ஷங்கர், தனது படத்தில் காட்டப்படும் பிரமாண்டத்தை மக்கள் வியர்த்து பார்க்கும் வகையில் மகள் திருமண வரவேற்பை பார்த்து அனைவரும் வியர்த்து பார்க்கும் வகையில் அமைய வேண்டும் என திட்டமிட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டார் ஷங்கர்.

வரவேற்பு நிகழ்ச்சிக்கு கொடுக்கப்படும் அழைப்பிதழ் ஓன்று சுமார் 8500 ரூபாய் என்றும், இதுவரை 800 பேருக்கு இந்த அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் 700 பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர். சினிமா படப்பிடிப்புகளுக்கு மிக பிரமாண்டமாக செட் அமைத்து வருகின்றவர் ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், இவரை வைத்து மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான பிரமாண்ட செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் ஷங்கர்.

சுமார் ஆறு கோடி செலவில் பிரமாண்ட செட் அமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார் ஆர்ட் டைரக்டர் முத்துராஜ். இந்நிலையில் தீடிரென செட் அமைக்கும் பணியை நிறுத்த சொல்லி ஷங்கரிடம் இருந்து தகவல் வந்ததை தொடர்ந்து செட் அமைக்கும் பனி நிறுத்தப்பட்டது. மேலும் அழைப்பிதழ் கொடுக்கும் பணியும் நிறுத்தப்பட்டு. இதுவரை அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட நபர்களுக்கு ஒரு குறுச்செய்தி ஒன்றை ஷங்கர் தரப்பில் இருந்து ணைப்பப்பட்டுள்ளது.

அதில் மே 1ம் தேதி நடைபெற இருந்த மகள் ஐஸ்வர்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, வேறு ஒரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, இன்னும் புதிய தேதி முடிவாக வில்லை என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட காரணம் என்ன என்பது பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. ஆனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு சினிமா வட்டாரத்தில் அரசல் புரசலாக சில தகவல் வெளியாகியுள்ளது.

அதில் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா – ரோஹித் இருவருக்கு இடையில் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக சிறு சிறு மோதல் ஏற்பட்டு வருவதாகவும், இது தற்பொழுது உச்சக்கட்டத்தை அடைத்திருக்கும் இதனால் தான் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஷங்கர் மக்களின் திருமண வாழ்க்கை பத்து மாதத்தில் முடிவுக்கு வந்துவிடும் அளவுக்கு அவர்களுக்கு என்ன பிரட்சனை என பலர் குழப்பத்தில் உள்ளது குறிப்பிடதக்கது.

விபூதி, குங்குமம் வைக்க கூடாதா.? ஏ ஆர் ரகுமானுக்கு முக்கிய சினிமா பிரபலம் கண்டனம்.. என்ன நடந்தது தெரியுமா.?