பிரமாண்டம் என்றால் இனி நான் தான்.. சங்கருக்கு சவால் விடும் லோகேஷ் கனகராஜ்..

0
Follow on Google News

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்பொழுது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இயக்குனராக வலம் வருகிறார். அவர் எடுத்த படங்கள் அனைத்துமே மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ள நிலையில், இன்று அவருடைய இயக்கத்தில் நடிப்பதற்கு முன்னணி நடிகர்கள் பலர் போட்டி போட்டு கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான இயக்குனர் என பெயர் பெற்றவர் இயக்குனர் சங்கர்.

குறிப்பாக சங்கர் இயக்கும் படங்களில் அதிக செலவாகுவது அவருடைய படத்தின் பாடல் காட்சிகளுக்கும் சண்டைக் காட்சிகளுக்கும், இதில் சண்டை காட்சிகளை விட பாடல் காட்சிகளுக்கு அதிக செலவாகும். அந்நியன் படத்தில் இடம் பிடித்த அண்டங்காக்கா கொண்டைக்காரி உட்பட பல பாடல்களை மிகப் பிரம்மாண்டமாக எடுத்து வியப்பூட்டும் வகையில் அதிக செலவு செய்திருப்பார் இயக்குனர் சங்கர்.

அதே போன்று இந்தியன் படத்தில் கப்பலேறி போயாச்சு என்கின்ற பாடலுக்கு மிகப்பெரிய செலவு செய்திருப்பார் சங்கர். இப்படி சங்கர் இயக்கும் படங்களில் பாடல்கள் தான் அவரை பிரம்மாண்ட இயக்குனர் என்கின்ற பெயர் பெறுவதற்கு காரணமாக இருந்தது, லியோ படத்தை இயக்கி வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிக பிரம்மாண்டமாக ஒரு பாடல் காட்சி எடுக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த பாடல் காட்சி தான் லியோ படத்தின் ஹைலைட் என்று சொல்லும் அளவிற்கு படமாக்கப்பட இருக்கிறது. சுமார் 2000 நடன கலைஞர்கள் பங்குபெறும் வகையில் இந்த பாடல் காட்சி படமாக்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் மட்டும் அவ்வளவு டான்சர்கள் கிடைக்காது என்பதால், ஹிந்தி சினிமா, தெலுங்கு சினிமா என இந்தியா முழுவதும் இருந்து சுமார் 2000 டான்ஸர்கள் இந்த பாடல் காட்சியில் இடம்பெற இருக்கிறார்கள்.

இதற்காக மே 20 ஆம் தேதியிலிருந்து ஒன் ஜூன் 1ம் தேதி வரையும் ரிகர்சல் நடைபெறும் என்றும், அந்த ரிவர்சலில் 2000 டான்ஸர்களும் பங்கு பெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ரிகர்சல் முடிந்ததும் ஜூன் இரண்டாம் தேதியில் இருந்து அடுத்த பத்து நாட்கள் ஜூன் 11 வரை இந்த பாடல் காட்சிகள் படமாக்கப்படுகிறது. ஆக மொத்தம் சுமார் 20 நாட்கள் 2000 டான்சர்கள் இந்த படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள்.

அந்தப் பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் கோரியோகிராபி செய்ய இருக்கிறார். இந்நிலையில் இதுவரை பிரம்மாண்ட இயக்குனர் என்று வலம் வந்த இயக்குனர் சங்கர். லியோ படத்தில் இடம் பெற இருக்கும் இந்த பிரம்மாண்ட பாடலுக்கு பின்பு அடுத்த பிரம்மாண்ட இயக்குனர் என்கின்ற பட்டத்தை லோகேஷ் கனராஜ் தட்டிச் செல்லும் அளவிற்கு இயக்குனர் சங்கருக்கே சவால் விடும் வகையில் இந்த லியோ படத்தில் இடம்பெறும் இருக்கும் இந்த பாடல் படமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது