பழைய செல்வராகவன் என்ட்ரி.. 7 ஜி ரெயின்போ காலனி பார்ட் 2.. ஹீரோ யார் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் செல்வராகவன் அவருடைய தந்தை கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறியப்பட்டவர். துள்ளுவதோ இளமை படம் முழுக்க முழுக்க செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியிருந்தாலும் கூட. அந்த படத்தை மார்க்கெட் செய்ய வேண்டும் என்பதற்காக தந்தையின் பெயரை இயக்குனர் என்று அடையல்படுத்தப்பட்டது.

முதல் படமே மிகப்பெரிய ஹிட் அடித்து இளசுகளை தன் வயப்படுத்திக் கொண்ட செல்வராகவன், அடுத்தடுத்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி போன்ற மெகா ஹிட் படங்களை கொடுத்து அன்றைய காலகட்டத்தில் நம்பர் ஒன் இயக்குனராக வலம் வந்தவர். இவர் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை படம் அதுவரை வெறும் காதல் படங்களை மட்டும் இயக்கி வந்த சொல்லு ராகவன் தன்னால் ஆக்சன் படமும் இயக்க முடியும் என்று நிரூபித்து காட்டிய படம் தான் புதுப்பேட்டை.

பல முன்னனி நடிகர்கள் செல்வராகவன் படத்தில் நடிக்க ஆசைப்பட்டு கதை கேட்டு வந்தாலும், சில காரணங்களால் அது தவிர்க்கப்பட்டது. இப்படி ஒரு காலத்தில் முன்னணி இயக்குனராக இருந்து வந்த செல்வராகவன் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான படங்கள் சரிவர போகவில்லை, இதனால் படம் இயக்குவதை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு சினிமா படங்களில் சில கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் செல்வராகவன்.

இந்த நிலையில் சமீப காலமாக தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்து கொண்டு இருக்கையில், செல்வராகவன் இயக்கத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த 7g ரெயின்போ காலனி என்கின்ற இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் எடுக்க இருப்பதற்கான வேலைகளை தொடங்கியுள்ளதாக தகவல் வழியுள்ளது.

7ஜி ரெயின்போ காலனி படத்தை ஏ.எம்.ரத்தினம் தயாரித்திருந்தார், அந்த வகையில் இரண்டாம் பாகத்தையும் ஏ எம் ரத்னமே தயாரிக்க இருக்கிறார். அதேபோன்று 7g ரெயின்போ காலனி படத்தில் தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்தினம் மகன் ரவி கிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்தார், இவர் நடித்த முதல் படமே மிகப்பெரிய ஹிட் கொடுத்திருந்தாலும் அடுத்தடுத்து மிகக் குறுகிய காலத்தில் காணாமல் போய்விட்டார் ரவி கிருஷ்ணா.

தற்பொழுது மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் வகையில் உடற்பயிற்சி செய்து தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துள்ள ரவி கிருஷ்ணா, தன்னுடைய தந்தை தயாரிப்பில் செல்வராகவன் இயக்கம் 7ஜி ரெயின்போ காலனி பார்ட் 2வில் மீண்டும் என்ட்ரி கொடுக்க உள்ளதாக உள்ளது குறிப்பிடத்தக்கது