நானும் சேரி பகுதி தான்.. அப்படினா நானும் ரவுடியா… நேரடியாக சண்டையிட்ட இயக்குனர் பா.ரஞ்சித்…

0
Follow on Google News

இயக்குனர் பா.ரஞ்சித் பெரும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர், இவர் இயக்குனராக பிரபலம் அடைந்ததை விட பொது மேடைகளில் பேசி சர்ச்சையில் சிக்கி பிரபலம் அடைந்தது தான் அதிகம், இது போன்று தொடர்ந்து பேசி வருவதால் பா.ரஞ்சித் தன்னை ஒரு சாதி வட்டத்துக்கு அடைத்து கொண்டார், இதனை தொடர்ந்து அவரை பொது தளத்திலும் அப்படியே பார்க்க பட்டு வருவதாக கருத்து நிலவி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், நான் அரசுப் பள்ளி, அரசு கல்லூரி மாணவன்தான். அரசுப் பள்ளியில் படிப்பது என்பதையே தாழ்வு மனப்பான்மையாக கருதும் சூழல் இந்த சமூகத்தில் உள்ளது. எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அந்த சமயம் படிக்கும் சூழல் இல்லை. எனக்கு படிப்பதை காட்டிலும் வரைவது தான் மிகவும் பிடிக்கும். பள்ளிக்கூடத்தில் எப்போதும் வரைந்து கொண்டே இருப்பேன் என பேசிய பா.ரஞ்சித்.

மேலும், குறிப்பாக அரசு பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் நன்றாக பழகுவார்கள் மற்றும் அவர்களை ஊக்குவிப்பார்கள். அரசு பள்ளி எனக்கு மிகவும் நம்பிக்கை கொடுத்தது. மேலும் நான் படித்து முடித்துவிட்டு எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்பதை என் அரசு பள்ளியும் கல்லூரியுமே முடிவு செய்தன. இப்படிப்பட்ட பின்னணியில் வளர்ந்து வந்து சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பிறகு, பல இடங்களில் தாழ்வு மனப்பான்மை இருப்பதை கண்டறிந்தேன்.

உதாரணமாக என்னுடைய மெட்ராஸ் படத்தின் கதையை பலரிடம் சொல்லும் போது, பலரும் படம் டார்க்காக உள்ளது என்று என்னிடம் கூறினார்கள். சேரி பகுதியைச் சேர்ந்த கதைகள் என்றாலே டார்க் படம் என்ற எண்ணம் பலரது மனதில் உள்ளது. ஆனால் நானும் அங்கேயே வாழ்ந்தவன் தான். எனது வாழ்க்கை சந்தோசமாகவும் வண்ணமயமாகவும் இருந்திருக்கிறது.

ஆனால் அந்த பகுதி தொடர்பான கதைகளை சொல்ல போகும் போது இது சோகமான கதைகள் என்ற ஸ்டீரியோ டைப் எண்ணங்கள் இருக்கின்றன. அந்த எண்ணங்களை உடைப்பதை பெரிய விஷயமாக நான் பார்க்கிறேன். அதனால்தான் மெட்ராஸ் படத்தில் மக்களின் வாழ்வியலை வண்ணமயமாக காட்டியிருப்பேன்.
படத்தில் கூடுதலாக எந்த வண்ணமும் சேர்க்காமல் இயல்பானதாக காட்டினேன். மெட்ராஸ் படத்திற்கு பிறகு நான் எண்ணியதைப் போலவே அவர்களின் கோணம் மாறியது.

இதை அடுத்து சென்சார் போர்டு மெட்ராஸ் படத்தை பார்த்துவிட்டு ஏ ப்ளஸ் சர்டிபிகேட் தருவதாக கூறியது.நான் ஏன் என்று கேட்டபோது சேரி மக்களை பற்றி தானே படம் எடுக்கிறீர்கள், அந்த மக்களுக்கு மட்டுமே போட்டு காட்டுங்கள். மேலும் இது ரவுடிகளை பற்றிய படம் தானே அதற்கான சான்றிதழை தருகிறோம் என்று கூறினார்கள். அவர்கள் கூறியது எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது என தொடர்ந்து பேசிய பா.ரஞ்சித்.

மேலும் அது எப்படி நீங்கள் சேரி பகுதியில் வாழும் மக்களை எல்லாம் ரவுடியாக கருதுவீர்கள். நானும் அங்கிருந்து தான் வந்தேன் அப்போ நான் ரவுடியா என்று கேட்டு சண்டை இட்டு வந்தேன். அதன் பின்னர்தான் படமே வெளியானது. இதைத் தொடர்ந்து மெட்ராஸ் படம் புதிய கோணத்தை இந்திய சினிமாவில் உருவாக்கித் தந்தது. மக்களுக்கும் படம் பிடித்து போனது. என்று தனது அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார் பா.ரஞ்சித்.

இந்நிலையில் சேரி மக்களை பற்றி தானே படம் எடுக்கிறீர்கள், அந்த மக்களுக்கு மட்டுமே என்று காட்டுகள் என சென்சார் போர்டில் இருப்பவர் இயக்குனர் பா.ரஞ்சித்திடம் கேட்டதும், நேரடியாக அவர்களிடம் பா.ரஞ்சித் சண்டையிட்டதும் குறித்தும் உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.