ஏற்கனவே எந்திரன், 2.0 என எவர்க்ரீன் பாக்ஸ் ஆபிஸ் இண்டஸ்ட்ரி ஹிட் ரெக்கார்டை வைத்திருந்த ரஜினிகாந்த் மீண்டும் தன்னுடைய படை பலத்தை ஜெயிலர் படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகனத் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது.
20வது நாளான இன்றும் ஜெயிலர் திரைப்படம் பல திரையரங்குகளில் 30 சதவீதம் நிறைந்த அரங்குகளுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஜெயிலர் படத்தின் வசூல் மேலும், அதிகரித்துள்ள நிலையில், 600 கோடி கிளப்பில் விரைவில் ஜெயிலர் இணையும் என்பது உறுதியாகி உள்ளது. விஸ்வரூபமான வசூல் வேட்டையை ஜெயிலர் படம் நடத்தி உள்ள நிலையில், ரஜினிகாந்தின் லால் சலாம் மற்றும் தலைவர் 170 உள்ளிட்ட படங்களுக்கு இப்பவே ஜெட் வேகத்தில் ஹைப் மற்றும் பிசினஸ் எகிறியுள்ளது என்கின்றனர்.
ஒரு பக்கம் ரஜினி மார்க்கேட் ஏறிக் கொண்டிருக்க மறுபக்கம் நெல்சனின் மார்க்கெட் கிறு கிறுவென்று ஏறி வருகிறது. கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சிநிமாவிய்ல் இயக்குனராக அறிமுகமான நெல்சன், தனது முதல் படத்திலே வித்தியாசமான மேக்கிங்கால் கவனம் ஈர்த்தார். இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ படத்தை இயக்கினார். பிரியங்கா மோகன், வினய், ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் அனிருத் இசையில் ‘டாக்டர்’ படம் வெளியானது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்து சாதனை படைத்தது டாக்டர் படம்.இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தான் விஜய்யுடன் இணைந்தார் நெல்சன் திலீப்குமார். மிகுந்த எதிர்பார்ப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் ‘பீஸ்ட்’ படம் உருவானது. படத்தின் பாடல்கள், டிரெய்லர் எல்லாம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் படம் வெளியாகி ஏகப்பட்ட ட்ரோல்களை சந்தித்தது.
இதனால் ஜெயிலரை இயக்கும் வாய்ப்பு கூட நெல்சன் கை நழுவி போகும் நிலை ஏற்பட்டது. இதையெல்லாம் தாண்டி ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி முடித்தார் நெல்சன் திலீப்குமார். ரொம்ப நாட்களுக்கு பிறகு ரஜினியின் மாஸ் காட்சிகள் நிறைந்த படமாக வெளியாகியுள்ளதாக ஜெயிலரை பாராட்டி தள்ளினார்கள் ரசிகர்கள். வசூலிலும் இந்தப்படம் சக்கை போடு போட்டது. ‘ஜெயிலர்’ படத்தின் இமாலய வெற்றியால் நெல்சனின் மார்கெட் தற்போது எகிறியுள்ளது.
இதையடுத்து நெல்சனின் அடுத்த படம் என்ன என ரசிகர்கள் ஆவலாக கேட்டு வருகின்றனர். அந்த வகையில் நெல்சனின் அடுத்த படம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில், மீண்டும் சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு தான் படம் பண்ண போகிறாராம் நெல்சன். அப்படத்தை இயக்க இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு ரூ. 55 கோடி சம்பளம் கொடுக்க முடிவு செய்துள்ளதாம் சன் பிச்சர்ஸ் நிறுவனம்.
ஒரே படத்தின் வெற்றியின் மூலம் நெல்சன் திலீப்குமார் சம்பளம் இரட்டிப்பு ஆகியுள்ளது. ஜெயிலர் படத்தை இயக்க ரூ. 22 கோடி சம்பளம் வாங்கிய நெல்சன், அதே தயாரிப்பு நிறுவனத்தில் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்திற்காக ரூ. 55 கோடி சம்பளமாக வாங்கவுள்ளார். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை விட நெல்சன் சம்பளம் அதிகம் என பேசப்படுகிறது. மேலும் தொடர்ந்து பெரிய படங்களை அடுத்தடுத்து இயக்கி வந்ததால் ஒரு சிறிய இடைவேளை விட்டு தன் அடுத்த பட வேலைகளை நெல்சன் துவங்க இருப்பதாக தகவல் வந்துள்ளது