இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், லைக்கா தயாரிப்பில் அதிக பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு வாரங்களை கடந்து தற்பொழுது சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
பொன்னியின் செல்வன் படம் திரைக்கு வருவதற்கு ஒரு மாதங்களுக்கு முன்பு வரை, இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. பொன்னியின் செல்வன் படம் வெளியாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அப்படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களும், கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்கள் ப்ரோமோஷன் கலந்து கொண்டு இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகரித்தனர்.
பொன்னியின் செல்வன் படம் வெளியாகி எதிர்மறை விமர்சனம், ஆதரவு விமர்சனம் மற்றும் கலவையான விமர்சனம் என்று மூன்று வகைகளில் விமர்சனத்தை பெற்றது. இது பொன்னியின் செல்வன் படத்தில் என்ன தான் இருக்கின்றது என்கின்ற ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்து, திரையரங்குகளுக்கு மக்களை படையெடுத்துச் செல்ல தூண்டியது.
பொன்னியின் செல்வன் படம் வெளியான அடுத்த சில நாட்களில் அந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமான ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இயக்குனர் வெற்றிமாறன் பேசியது பெரும் விவாத பொருளாக மாறியது. திருவள்ளுவர்க்கு காவி உடை அணிவதாகட்டும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக காட்டுவதாகட்டும், இப்படி தொடர்ந்து சினிமாவில் அடையாளங்கள் பறிக்கப்பட்டு வருகிறது.
இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று வெற்றிமாறன் பேசியது கடும் சர்ச்சையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் ராஜராஜ சோழன் இந்து இல்லை என்று ஒரு தரப்பினரும். ராஜராஜ சோழன் இந்து தான் என்று ஒரு தரப்பினரும் அவரவர் வாதங்களை முன் வைத்தனர். மேலும் பல தமிழ் ஆர்வலர்கள் அவரவர் பார்வையில் ராஜராஜ சோழன் எந்த மதம் என்கின்ற கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
வெற்றிமாறனின் பேச்சு பொன்னியின் செல்வன் படத்திற்கு மேலும் பிரமோஷன் ஆக அமைந்தது. இதனால் ஐந்து நாட்களில் பொன்னியின் செல்வன் படத்திற்கு மக்கள் கூட்டம் குறைந்து விடும் என்று எதிர்பார்த்த நிலையில். மேலும் வெற்றி மாறனின் சர்ச்சை பேச்சின் காரணமாக மேலும் இந்த படத்திற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை ஓட வைப்பதற்காகவே வெற்றிமாறன் மூலம் மணிரத்தினம் இவ்வாறு பேசி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார்கள் என்கின்ற விமர்சனமும் எழுந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதத்தில் பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.
பார்த்திபன் தன்னுடைய சமூக வலைதளப்பாக்கத்தில், 400 கோடி கடந்துள்ளது !!!! இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சனையாக மதம்மாறி விட்டது! இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சனையை எழு (இ)ப்ப லாம்! எழு ப்பினால் … இன்னும் ஒரு 100 கோடி, என்று பார்த்திபன் பதிவு செய்துள்ளார். வெற்றிமாறன் மூலம் சர்ச்சைக்குரிய வகையில் பேசவைத்து படத்தை ஓட வைத்துள்ளது பார்த்திபனின் இந்த பதிவு மூலம் வெளிப்பட்டுள்ளது என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.
மேலும் ,நீங்கள் எடுத்த படத்தின் மீதும், டைரக்டர் மீதும், நல்ல படங்களை வரவேற்கும் ரசிகர் மீதும் நம்பிக்கை இல்லாமல். ஏதோ ஒரு பிரச்சனையின் மீதுதான் நம்பிக்கை வைத்து வெற்றிமாறன் மூலம் சர்ச்சை ஏற்படுத்தி படத்தை ஓட வைத்துள்ளீர்கள். இந்து என்ற சொல்லை வைத்து வியாபாரம் செய்து விட்டீர்கள். சினிமாவில் இருப்பவர்களுக்கு பணமே பிரதானம், கலாச்சாரத்தை பற்றி கவலை கிடையாது.
இந்து பிரச்சனையின் காரணமாக இந்த படம் வெற்றி பெற்றது என பார்த்திபன் கூறுவது, ஊர் ரெண்டு பெற்றால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்கின்ற பழமொழி தான் ஞாபகத்துக்கு வருகிறது. இப்படி சம்பாதிச்சசு சோறு சாப்பிடனுமா.? என்று பார்த்திபன் கருத்துக்கு எதிராக கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் வெற்றிமாறன் சர்ச்சை பேச்சின் பின்னனியில் இயக்குனர் மணிரத்தினம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.