லியோ தோல்வியை ஒப்பு கொண்ட லோகேஷ்… வெட்கமே இல்லாமல் வெற்றி விழா கொண்டாடிய விஜயை என்ன சொல்வது…

0
Follow on Google News

நடிகர் விஜயின் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில், படக்குழுவினர் வெளியாகி முதல் வாரத்திலேயே வசூல் சாதனை செய்து விட்டதாகவும், வெற்றி பெற்று விட்டதாகவும் கூறி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக வெற்றி விழா கொண்டாடினர். தற்போது, இயக்குனர் லோகேஷ் படத்தின் தோல்விக்கு இதுதான் காரணம் என்று பகிரங்கமாக செஞ்ச தப்பை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் கைதி, விக்ரம் என பக்கா மாஸான படங்களைக் கொடுத்த லோகேஷ் மீதான எதிர்பார்ப்பு, பிரபலங்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திடம் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் ஓங்கியிருந்தது. மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ்-விஜய் கூட்டணி இரண்டாவதாக லியோ படத்தில் இணைந்தது. லோகேஷ் படம் என்றாலே திரைக்கதை அருமையாக இருக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் லியோ ரிலீஸ் செய்யப்பட்டது.

ஆனால், இது விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தினாலும் பொதுவான ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. குறிப்பாக லியோ படத்தின் இரண்டாம் பாகம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என பெரும்பாலான ரசிகர்கள் தெரிவித்திருந்தனர். சோசியல் மீடியா முழுவதும் நெட்டிசன்கள் படத்தின் செகண்ட் ஹாஃப் இழுவையாக இருப்பதாகவும், இவ்வளவு பைட் சீன் தேவையில்லை என்றும் விமர்சித்து வந்தனர்.

இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், “இன்டர்வெலுக்குப் பிறகு வரும் பிளாஷ்பேக் காட்சிகள் எல்லாம் கற்பனையானவையே. அதில் தான் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. படத்தின் இரண்டாம் பாகம் வரும்போது கதை முழுமை அடையும்” என்று பல பேட்டிகளில் தெரிவித்து ரசிகர்களை ஆறுதல் படுத்தி வைத்திருந்தார்.

இப்படி, லியோ படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்களை கட்டுப்படுத்துவதற்காக, ஏதேதோ காரணங்களை கூறி பூசி முழுகி வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இப்போது லியோ படத்தின் தோல்விக்கு இதுதான் காரணம் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார். மேலும் லியோ படத்தில் செய்த தப்பை அடுத்த படங்களில் செய்ய மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார்.

அதாவது, லியோ படத்தை தொடங்கும் போதே படத்தின் ரிலீஸ் தேதியை ரசிகர்களுக்கு அறிவித்து விட்டேன். ஆனால், படத்தின் செகண்ட் ஹாஃப் காட்சிகளை படமாக்கும் போது அதற்கு போதுமான டைம் கிடைக்கவில்லை. சொன்ன தேதிக்குள் படத்தை முடித்து ரிலீஸ் பண்ண வேண்டும் என்ற நெருக்கடி நிலை ஏற்பட்டுவிட்டது. அதனாலேயே இன்டர்வெலுக்குப் பிறகு இருக்கும் காட்சிகள் சொதப்பிவிட்டது. இனி அடுத்த படங்களில், பிரீ ப்ரோடுக்ஷன், போஸ்ட் ப்ரோடுக்ஷன், என எல்லாத்தையும் முடித்த பிறகு தான் ரிலீஸ் டேட் அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்கள் கண்டிப்பாக சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிடும் என்ற சூழல் இருக்கும் நிலையில், லியோ படம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்காதது லோகேஷின் கரியரில் முதல் சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் லோகேஷ் அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கவுள்ளார். தற்போது, ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் 170 படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால், அடுத்தவருடம் மார்ச் அல்லது ஏப்ரலில் லோகேஷ் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் லோகேஷ் ரஜினியை வைத்து படம் எடுக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானதிலிருந்து பலரும் மீம்ஸ்களில் விஜயை கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே, இயக்குனர் நெல்சன் விஜயை வைத்து பீஸ்ட் படத்தை எடுத்து பயங்கரமாக அடி வாங்கி பின்னர், ரஜினியை வைத்து ஜெயிலர் படம் எடுத்து ஹிட் கொடுத்து மேலே வந்திருக்கிறார். இப்போது இயக்குனர் லோகேஷும் லியோ படத்தில் வாங்கிய அடிக்கும் ரஜினி படத்தின் மூலம் மருந்த்திட்டுக் கொள்ளப் போகிறார் என்று விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.