தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்ற இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக இருந்தவர் அட்லீ. இவர் நடிகர் ஆர்யா-நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தில் முலம் இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய ஹிட் கொடுத்து தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றார் அட்லீ.
முதல் படம் ஹிட் அடித்ததும் சற்று அடக்கி வாசித்து ஒவ்வொரு பேட்டிகளிலும் பேசிய அட்லி. அடுத்து விஜய் நடிப்பில் தெறி படம் இயக்கிய பின்பு தன்னை மிஞ்சிய ஒரு இயக்குனர் இல்லை என்கின்ற தோரணையில் அவருடைய பேச்சும் தலைக்கனமும் அதிகரித்தது. தொடர்ந்து விஜய் நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் இயக்கிய அட்லி அதில் தெறி படம் தவிர்த்து மற்ற இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தினார்.
அவர் இயக்கத்தில் வெளியான படம் நன்றாக வரவேற்பை பெற்றிருந்தாலும், தேவைக்கு அதிகமாக அப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு வீண் செலவுகளை அட்லீ இழுத்து விட்டதின் விளைவு, படத்தின் தயாரிப்பாளருக்கு மிக பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பழைய படங்களின் கதைகளை காப்பியடிப்பது, ஹாலிவுட் படங்களின் காட்சிகளை திருடுவது, என்று காப்பி அடித்து படம் எடுப்பதற்கு பெயர் போன அட்லி.
ஒவ்வொரு மேடைகளிலும் அவர் கொடுக்கும் பில்டப் பேச்சு இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியவில்லையா.? என்று விமர்சனம் உண்டு. இந்த நிலையில் இன்றைய காலகட்டத்தில் கைதி, மாஸ்டர், விக்ரம் என்று தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத மிகப்பெரிய ஹிட் கொடுத்து நம்பர் ஒன் இயக்குனராக வளம் வந்து கொண்டிருக்கின்றவர் லோகேஷ் கனகராஜ்.
அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். படத்தின் வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க தினமும் மாலை மனதை ரிலாக்ஸ் செய்வதற்காக ராமாவரம் தோட்டம் அருகில் கிரிக்கெட் விளையாண்டு கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அந்தளவுக்கு மிகவும் எளிமையாகவும் எந்த ஒரு பதட்டமும், பரபரப்பும் இல்லாமல் அவருடைய படங்களை இயக்கி வருகின்றவர் லோகேஷ் கனகராஜ்.
சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் மிக கேஷுவலாக பதில் அளித்து தான் எவ்வளவு பெரிய ஹிட் கொடுத்தாலும் தன்னுடைய அடக்கமும் பண்பையும் வெளிப்படுத்தினார் லோகேஷ் கனகராஜ். ஆனால் காப்பியடித்து படம் எடுக்கக்கூடிய அட்லி போன்றவர்கள் லோகேஷ் கனகராஜை பார்த்து தன்னுடைய ஆணவத்தையும் திமிரையும் அடக்கி கொள்ள வேண்டும் என்கின்ற வகையில்,
லோகேஷ் கனகராஜின் நடவடிக்கைகள் அட்லீக் ஒரு பாடமாக அமைந்துள்ளது இந்த நிலையில் இனி வரும் காலங்களிலாவது அட்லி ஓவர் பில்டப் கொடுக்காமல் அடக்கி வாசிக்க வேண்டும் என்பது அனைவருடைய ஆசை என்பதாலும், அதற்கான வாய்ப்புகள் இல்லை என்கின்றனர் சினிமா துறையினர்.