விஜயை காலி செய்ய விஷால் போட்ட திட்டம்… தப்பிப்பாரா விஜய்.?

0
Follow on Google News

நடிகர் விஷால் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் லத்தி. இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் பேசிய நடிகர் விஷால், தனக்கு நடிகர் விஜயை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்கின்ற ஒரு ஆசை உண்டு என்றும், அது என்னுடைய வாழ்நாள் கனவு என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கம் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படம் ஒன்றில் வில்லனாக நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஷாலின் அணுகிய போது,

அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டார் விஷால், அதற்கு இது சரியான நேரம் இல்லை என்றும் விஷால் விளக்கமும் கொடுத்திருந்தார். இந்த நிலையில் விஜய் படத்தில் நடிக்க மறுத்த விஷால் நடிகர் விஜய் வைத்து தனக்கு இயக்க ஆசையாக உள்ளது என்று தெரிவித்துள்ளது, தன்னுடைய லத்தி படத்தை விஜய் ரசிகர்கள் மூலம் பிரமோஷன் செய்வதற்காக தான் என்றும் ஒரு விமர்சனம் எழுந்துள்ளது.

அதே நேரத்தில் இதற்கு முன்பு நடிகர் விஷால் நடித்த படங்களின் இயக்குனர் பலர் விஷாலின் ஒத்துழைப்பு இல்லாமல், மேலும் இயக்குனர் வேலைகளில் விஷால் தலையிட்டு காரணமாக, பல இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டார்கள். பல இயக்குனர்களை காலி செய்துவிட்டு அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்ட விஷால் தற்பொழுது இயக்குனராகஉருவாகியுள்ளார் என்கின்ற கிண்டல் பேச்சும் சினிமா வட்டாரத்தில் இருக்கின்றது.

விஷால் நடிப்பில் வெளியானால் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை விஷால், அவரே இயக்கி நடிக்க உள்ளார். அதனை தொடர்ந்து அவர் இயக்குனராக அவதாரம் எடுத்து உள்ள நிலையில் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கும் திட்டம் உண்மையிலேயே அவருக்கு இருக்கலாம், அதே நேரத்தில் இதற்கு முன்பு அவர் நடித்த படங்களில் பணியாற்றிய இயக்குனர்கள் வேலைகளில் தலையிட்டு அவர்களை காலி செய்தது போல் விஜய் நடிக்கும் படத்தை இயக்கி விஜயின் நடிப்பிலும் குளறுபடி செய்து அவரை காலி செய்ய விஷால் போட்ட திட்டமா இது.? என சினிமா வட்டாரத்தில் கிண்டல் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

கூப்பிட்டு வெச்சு அசிங்க படுத்திய வடிவேலு… விஜயகாந்த் என்ன செய்தார் தெரியுமா.?