தன்னுடைய மகன் விஜயை ஹீரோவாக உருவாக்க விஜய் பட்ட கஷ்டத்தை விட அவருடைய தந்தை எஸ்.ஏ.சி பட்ட கஷ்டம் ஏராளம். அந்த வகையில் விஜய் நடிக்கும் படத்தின் கதை, இயக்குனர், தயாரிப்பாளர் என அனைத்தையும் தேர்வு செய்யும் இடத்தில் விஜய் தந்தை இருக்கும் வரை விஜய்க்கு தொடர் வெற்றி படங்கள் தான், ஆனால் எப்போது விஜய் அவருடைய தந்தையை கழட்டிவிட்டாரோ அப்போது இருந்து, நல்ல கதையை தேர்வு செய்யமுடியாமல் தள்ளாடி வருகிறார் விஜய்.
எஸ்.ஏ.சி சந்திரசேகர் இன்றுவரை விஜயின் படங்களை ஒரு அப்பாவாக பார்க்காமல், இயக்குனராகவேதான் பார்ப்பாராம். அதனாலேயே நடிகர் விஜய் படத்தில் உள்ள குறைபாடுகளைக் கண்டுபிடித்து அதை விஜயிடமே தெரிவித்து விடுவார். இதனால் இருவருக்கும் இடையே பலமுறை மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது இதை சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இப்படிதான், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் ரிலீஸ் ஆன போது, சந்திரசேகர் அளித்த பேட்டி ஒன்றில், ஒரு படத்தில் ஸ்கீரீன் ப்ளே என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நன்கு அறிந்தவன் நான். அதுவும் விஜய் என் ஹீரோ. நான் உருவாக்கிய ஹீரோ விஜய். அவரை எங்கு கொண்டுவந்து வச்சிருக்கேன்.இப்படி ஸ்கிரீன் ப்ளே பண்ணத் தெரியாமல் போய் கவுத்திட்டீங்களே.’ என மிகவும் வருந்தி புலம்பும் வகையில் பேட்டி கொடுத்திருந்தார்.
இப்படி மகன் விஜய் நடிக்கும் படம் நன்றாக இல்லை என்றால், அதை வெளிப்படையாகவே ஒரு இயக்குனராக போட்டு உடைத்து விடுவார் எஸ்.ஏ.சி. இந்நிலையில் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் தற்பொழுது பேசிய எஸ்.ஏ.சி.
சமீபத்தில் ஒரு படம் பார்த்துவிட்டு, இயக்குனருக்கு போன் பண்ணி பாராட்டினேன். முதல் பாதி சூப்பர் சார், ஒரு படம் எப்படி பண்ணனும்னு உங்ககிட்ட இருந்து தான் கத்துக்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். அவரும் அதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தார்.
பின்னர் இரண்டாம் பாதி சரியில்ல சார்னு சொன்னேன். உடனே சார் நான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன் அப்பறமா கூப்பிடுறேன்னு சொன்னாரு. அப்பறம் கூப்பிடவே இல்ல. இத்தனைக்கும் படம் ரிலீஸ் ஆவதற்கு 5 நாள் முன்னாடியே நான் பர்ஸ்ட் காப்பி பார்த்துட்டு இதை சொன்னேன். நீங்கள் படத்தில் வைத்துள்ளதை போல் இந்த மதத்தில் இந்த நம்பிக்கையெல்லாம் கிடையாது சார்.
ஒரு தகப்பனே தன் பிள்ளையை கொல்வதெல்லாம் நல்லா இல்லனு சொன்னதும் சார் நான் அப்புறமா கூப்பிடுறேன்னு சொல்லி போனை வைத்தார். அப்பறம் கூப்பிடவே இல்லை. ஆனால் படம் ரிலீஸான பின் எல்லாரும் வச்சி செஞ்சாங்க. நான் சொன்ன விமர்சனத்தை எடுத்து அவர்கள் மாற்றி இருக்கலாம். நான் முன்கூட்டியே சொன்னதை தான் அத்தனை விமர்சகர்களும் சொல்லினார்கள். அவர்களுக்கெல்லாம் விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் தைரியம் இல்லை” என எஸ்.ஏ.சி பேசியிருந்தது விஜய் நடித்த லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் என்றும்.
விஜய் தந்தையாக மட்டுமில்லாமல் ஒரு மூத்த இயக்குனராக அவர் சொன்ன கருத்தை ஏற்று படத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்திருந்தால், லியோ இது போன்று தோல்வியை சந்தித்து இருக்காது, ஆனால் நான் பாராட்டும் போது காது குளிர கேட்டு கொண்டு, குறை சொல்லும் போது லோகேஷ் கனகராஜ் போனை கட் செய்து விட்டது, விஜய் அவருடைய தந்தையை மதித்து நடந்தால் தானே அவருடைய இயக்குனரும் மதிப்பார்கள் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.